ஒட்டன்சத்திரம் டூ திருவாரூர்! No பவர் பாலிடிக்ஸ்! சர்ச்சையில் சிக்க விரும்பாத அமைச்சர் சக்கரபாணி!
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் சக்கரபாணி, தான் உண்டு தன் பணி உண்டு என்கிற ரீதியில் தனது அலுவல் பணிகளை அமைத்துக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட வளர்ச்சிப் பணிகள், ஆய்வுக்கூட்டங்கள் என அரசுத்துறை ரீதியிலான விவகாரங்களில் மட்டும் ஆர்வம் காட்டும் அமைச்சர் சக்கரபாணி, அவைகளை தவிர்த்து மாவட்ட பவர் பாலிடிக்ஸில் தலை காட்டுவதில்லையாம்.
அமைச்சரின் இந்த நடவடிக்கைகள் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளராக உள்ள பூண்டி கலைவாணன் தரப்புக்கு ஹேப்பியை கொடுத்துள்ளதாம்.

உணவுத்துறை அமைச்சர்
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை-திரூவாரூர்-ஒட்டன்சத்திரம் என வாரத்தின் எல்லா நாட்களும் சுற்றி சுழன்று வருகிறார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டங்கள், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுகளில் மட்டும் ஆர்வம் காட்டும் இவர் அம்மாவட்டத்தின் உட்கட்சி அரசியலில் தலையிடுவதை தவிர்த்துவிடுகிறாராம்.

மாவட்டச் செயலாளர்
ஏனெனில் இவரும் ஒரு மாவட்டச் செயலாளர் (திண்டுக்கல் மேற்கு மாவட்டம்) என்பதால் இன்னொரு மாவட்டச் செயலாளரின் உணர்வுகளை புரிந்து வைத்திருப்பதே காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் திருவாரூர் மாவட்டத்திற்கு ஆய்வுக்கு செல்லும் இவர், கட்சியின் புரோட்டகால் முறையை முழுவதுமாக பின்பற்றத் தவறுவதில்லையாம். இதனால் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் தரப்புக்கு மகிழ்ச்சியாம்.

மற்ற மாவட்டங்கள்
இதனிடையே நெல்லை, தென்காசி, கோவை, சேலம் என மற்ற மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், செந்தில்பாலாஜி, கே.என்.நேரு உள்ளிட்ட இன்னும் சிலர் மீது அந்த மாவட்ட நிர்வாகிகளில் பலருக்கு அதிருப்தியும், வெளியூரில் இருந்து வந்து இவர் எப்படி நம்மை வேலை வாங்கலாம் என்ற கோபமும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம்
ஆரம்பத்தில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட சக்கரபாணி பிறகு திருவாரூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 4 தொகுதிகளை கொண்ட சிறிய மாவட்டமான திருவாரூரில், விவசாயிகளிடம் இருந்து தான் அதிக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications