மோடி இரும்பு மனிதர் அல்ல... கல் மனிதர்… மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: ஊழல் செய்பவர்களுடன் பிரதமர் மோடி கூட்டணி வைத்துள்ளது வெட்கக்கேடானது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார். அப்போது, குட்கா ஊழலை சிபிஐ விசாரிக்கும் நிலையிலும் அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Modi is not iron man; stone man says M.K.Stalin

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியது என்ன ஆனது? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

நரேந்திர மோடி இரும்பு மனிதர் அல்ல என்றும், அடிக்கல் அடிக்கடி நடுவதால் நரேந்திர மோடி கல் பிரதமர் என்றும் ஸ்டாலின் விமர்சனம் செய்தார். கருணாநிதி பிறந்ததால் திருவாரூர் திமுக-வின் தலைநகரம் என்று கூறிய மு.க. ஸ்டாலின், ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாளுடன் மத்திய பாஜக ஆட்சியும், தமிழக அதிமுக ஆட்சியும் முடிவுக்கு வரும் என்றார்.

[39 தொகுதிகளும் நுனி விரலில்.. ஒன்இந்தியா தமிழில்]

கம்யூனிஸ்ட்டுகளுடன் 2 ஆண்டுகள் அல்ல, இனி எப்போதும் சேர்ந்தே இருப்போம் எனவும் அவர் கூறினார். எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை என்பது வேடிக்கை என்றும் ஸ்டாலின் பேசினார்.

ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று கூறிய மோடி, வெறும் 15 ரூபாயாவது போட்டாரா என்றும் கேள்வி எழுப்பினார் .

மக்களை ஏமாற்ற தான் பாஜக-அதிமுக கூட்டணி வைத்துள்ளது என்றும், திமுக ஆட்சியில் ரூ.7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டிப் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+