பெரியார் சிலை மீது திடீரென வந்த சாமி சிலை! மர்ம நபர்கள் செயலால் திருவாரூர் அருகே பதற்றம்
திருவாரூர்: திருவாரூர் அருகே பெரியார் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் லட்சுமி சிலையை வைத்துச் சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
கடவுளே இல்லை எனக் கூறியவர் சிலை மீது, கடவுளின் சிலையை வைத்ததன் மூலம் அங்கு தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்க சிலர் திட்டமிட்டு செயல்பட்டிருப்பது தெரிய வருகிறது.
இதனிடையே திராவிடர் கழகத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அதில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பெரியார் சிலை
திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர் கடை வீதியில் பெரியார் முழு உருவச்சிலை உள்ளது. அந்தச் சிலையை திராவிடர் கழகத்தினர் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வருகிறோம் என திக நிர்வாகிகளுக்கு தகவல் அளித்திருக்கின்றனர். அதன் பேரில் பெரியார் சிலையை சுத்தம் செய்யச் சென்றவர்களுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சாமி சிலை
பெரியார் சிலை மீது சிறியளவிலான லட்சுமி சிலை இருந்ததைக் கண்ட திராவிடர் கழகத்தினர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகத்தில் தேவையற்ற சர்ச்சையை உருவாக்கும் நோக்கில் யாரோ வேண்டுமென்றே இந்தச் செயலில் ஈடுபட்டிருப்பதை உணர முடிகிறது. இதனிடையே இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் பெரியார் சிலை மூலம் பிரச்சனை ஏற்படுத்த முயன்றவர்களை தேடி வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவியில்பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீஸ் அதில் தொடர்புடைய நபர்களை தேடி வருகிறது. பெரியார் மறைந்து பல ஆண்டுகள் ஆன பின்னரும் அவரது கொள்கைகளும், கருத்துக்களும் இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. இதனால் தான் மறைந்த பெரியார் மீது இன்றும் வசவுகள் வருகின்றன. பெரியார் சிலையை அகற்ற வேண்டும் எனப் பேசிய சினிமா ஸ்டண்ட் நடிகர் கனல் கண்ணன் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

திமுக அரசு
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பெரியார் சிலை மீது கை வைக்கும் செயல் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பெரியார் குறித்து வாய்க்கு வந்ததை அவதூறாக பேசுபவர்களும் சில மாதங்களாக தலைமறைவாகவே இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications