பிரபல யூடியூபர் மதன் கௌரியை பார்த்ததுமே.. கடைசி நேரத்தில் "சர்ப்ரைஸ்" மெசேஜ்.. மலைத்த மன்னார்குடி
பிரபல யூடியூபர் மதன் கௌரியை காண மன்னார்குடியில் கூட்டம் கூடிவிட்டது
திருவாரூர்: பிரபல யூடியூபர் மதன் கௌரியின் திடீர் வருகை, மன்னார்குடி மக்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துவிட்டது..!
Recommended Video
சமூகத்தின் நிகழ்வுகள், முக்கிய தகவல்கள், பகீர் குபீர் சம்பவங்கள், மர்ம, அமானுஷ்ய விஷயங்கள் போன்றவைகளை, விலாவரியாக மக்களுக்கு எடுத்து சொல்பவர் யூடியூபர் மதன் கௌரி.
எவ்வளவு பெரிய கடினமான சம்பவங்களைகூட, அனைத்து தரப்பு மக்களுக்கும் புரியும் வகையில் விளக்கி தொகுத்து வீடியோவாக வெளியிட்டு வரும் திறமைசாலி..

ஃபேன்ஸ்
உலகில் நடந்த, நடக்கிற, நடக்கப் போகும் அனைத்து விஷயங்களை பற்றிய திரட்டி தருவதுடன், அவைகளை தன்னுடைய பேச்சாற்றலால் சுவாரஸ்யமாக சொல்வதிலேயே, 90'ஸ்களுக்கும் மதன் கௌரியை பிடித்துவிட்டது... அதிலும், குற்ற சம்பவங்களை மையமாக கொண்டு, இவர் வெளியிட்ட பல வீடியோக்கள், மில்லியன் பார்வையாளர்களை கடந்து செல்வது வழக்கம்.. இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளத்தில், இளைஞர்களே பெரும்பாலானவர்கள்..

கிரேஸ் + மேடி
அதிலும் கல்லூரி பெண்களுக்கு இவர் மீது தனிப்பட்ட கிரேஸ் உண்டு. கிட்டத்தட்ட, இணைய உலகின் மேடி என்று செல்லமாக இவருக்கு ஒரு பெயர் உள்ளதாம். தூத்துக்குடியை சேர்ந்த மதன் கௌரி, விட்டுச் சென்ற தன்னுடைய காதலிக்காக எடுத்த வீடியோ, திடீரென வைரலாகிவிட, யூடியூப் சேனலுக்கான விதை அங்கிருந்துதான் போடப்பட்டுள்ளது.. ஆனால் இத்தனை கோடி ரசிகர்களை மதன் பெற்றிருப்பதன் முக்கிய காரணமே அவரது அயராத உழைப்புதான்..

விசில்
இந்நிலையில் மதன் கௌரியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. ஆனால், அது மதன் கௌரி பதிவிட்ட வீடியோ இல்லை.. மன்னார்குடியில் புத்தக திருவிழா நடந்து வருகிறது.. இந்த புத்தக திருவிழாவில் மதன்கௌரி கலந்து கொண்டார்.. ஆரம்பத்தில் இந்த புத்தக விழாவுக்கு மதன்கௌரி வரப்போகிறார் என்று யாருக்குமே தெரியாது.. கடைசி நேரத்தில்தான், விஷயம் தீயாய் பரவியது.. அதற்குள் வாட்ஸ்அப்பிலும் மெசேஜ்கள் பரவிவிட்டது.. அடுத்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ரசிகர்கள், அந்த புத்தக திருவிழாவில் குவிந்து விட்டனர்..

சர்ப்ரைஸ் விசிட்
அவ்வளவு கூட்டத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது.. மாணவர்களே அதிக அளவில் திரண்டு வந்துவிட்டதால், அவர்களுடன் மதன்கௌரி கலந்துரையாடினார்.. அவர்களுடன் சிறிது நேரம் பேசி ஊக்கப்படுத்தும் கருத்துக்களை வலியுறுத்தினார்.. இதையடுத்து, நிகழ்ச்சி முடிந்ததும், மதன் கௌரியுடன் போட்டோ எடுக்க கூட்டத்தினர் ஆர்வத்துடன் முண்டியடித்தனர்.. அலைமோதிய ரசிகர் கூட்டத்துடன் செல்பி எடுத்துக்கொண்டார்.. வீடியோக்களை விடாமல் மாணவர்கள் எடுத்து கொண்டே இருந்ததுடன், அந்த அரங்கம் முழுவதும் விசில் சத்தம் பறந்து கொண்டே இருந்தது..!
-
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட்












Click it and Unblock the Notifications