திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியல் அறிவு.. சசிகலா குடும்பத்திற்கு நெருக்கம்.. இப்போது அமமுக வேட்பாளர்.. யார் இந்த எஸ்.காமராஜ்?

திருவாரூர் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிறுத்தப்பட்டு இருக்கும் எஸ்.காமராஜ் மிக முக்கியமான போட்டியாளராக பார்க்கப்படுகிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ்- வீடியோ

    திருவாரூர்: திருவாரூர் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிறுத்தப்பட்டு இருக்கும் எஸ்.காமராஜ் மிக முக்கியமான போட்டியாளராக பார்க்கப்படுகிறார்.

    திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.காமராஜ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அமமுக மாவட்டச் செயலாளரான எஸ்.காமராஜ், முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் தொகுதியில் இவர் மிகவும் பிரபலமான நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு நீண்ட அரசியல் வரலாறு இருக்கிறது.

    எஸ்.காமராஜ் யார்

    எஸ்.காமராஜ் யார்

    மன்னார்குடி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளரான எஸ்.காமராஜ் சசிகலா குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். எம்.காம், பிஎட் படித்து இருக்கும் இவருக்கு 52 வயதாகிறது. மன்னார்குடி அருகே இருக்கும் எட அன்னவாசலில்தான் இவர் பிறந்து வளர்ந்தது. இவரது மனைவி விஜயலெட்சுமி, டெல்டாவில் பிரபலமாக இருக்கும் தரணி கல்வி நிறுவனங்களின் தாளாளராக இருந்து வருகிறார்.

    அதிமுக உறுப்பினர்

    அதிமுக உறுப்பினர்

    எஸ்.காமராஜ் நீண்ட கால அதிமுக உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 1981லிருந்து அதிமுக உறுப்பினராக இருந்தார். நீடாமங்கலத்தில் 2 முறை அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் ஒன்றியக்குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவரின் சிறப்பான செயல்பாடு காரணமாக 2002ம் ஆண்டு ஒரு வருடம் அதிமுக திருவாரூர் மாவட்ட செயலாளராக பதவி வகித்தார்.

    தேர்தல் போட்டி

    தேர்தல் போட்டி

    2016 ஆம் ஆண்டு மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு எஸ் காமராஜ் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டார். அப்போது அவருக்கு எதிராக திமுக சார்பில் எம்எல்ஏவான டிஆர்பி ராஜா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இதில் எஸ் காமராஜ் 10 ஆயிரம் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார் .

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனாலும் அதிமுகவில் இவர் மதிப்பு உயர்ந்து கொண்டேதான் சென்றது. 2017ஆம் ஆண்டு எஸ்.காமராஜ் அதிமுக பிரிந்த போது, டிடிவி தினகரன் பக்கம் சென்றார். எஸ்.காமராஜ், சசிகலா தினகரன் ஆதரவாளராக ஆனார். அப்போதில் இருந்து எஸ்.காமராஜ் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து வருகிறார்.

    மிகவும் வலுவானவர்

    மிகவும் வலுவானவர்

    இவர் திருவாரூர் தொகுதியில் மிகவும் வலுவான வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு உள்ளூர் அதரவு நிறைய இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு இவர் சிறந்த போட்டியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறார்.

    English summary
    Thiruvarur by-election 2019: AMMK candidate S.Kamaraj will be an important striker in this game as he has lot of ground knowledge.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X