திருவாரூர் அரசு பள்ளியில் கீரிப்பிள்ளை கிரேவி.. நீர்த்தொட்டியில் 3 பேர்? எதிர் வீட்டில் நுழைந்த நாய்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் அருகே காரியாங்குடி அரசு தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம் கிடந்ததையடுத்து, போதை ஆசாமிகள் மூன்று பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். குடிநீர் தொட்டியில் மனிதகழிவு கலந்தது அந்த பகுதியில் பெரும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்வதென்ன? மாவட்ட ஆட்சியர் சொல்வதன்ன?

திருவாரூர் காரியாங்குடியில் ஊராட்சியில் செயல்பட்டு வருகிறது ஒன்றிய துவக்கப்பள்ளி.. இங்கு 14 மாணவியர் உட்பட, 31 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் ஒரே ஆசிரியர் அன்புச்செல்வி, பொறுப்பு தலைமையாசிரியராக பணிபுரிகிறார்.

thiruvarur government school drinking water tank

கடந்த 11ந் தேதி அதாவது வெள்ளிக்கிழமை சாயங்காலம், பள்ளி முடிந்ததுமே மாணவர்கள் வீட்டுக்கு சென்றனர்... பிறகு சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், நேற்று திங்கட்கிழமை காலை 8 மணி அளவில் காலை உணவு திட்டத்திற்காக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர்.. அப்போது சமையலறை உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்..

மனித கழிவு

அப்போதுதான், மாணவர்களின் குடிநீர் தொட்டியின் மூடியும் திறந்து கிடந்ததை கண்டு சந்தேகம் அடைந்து, உள்ளே எட்டிப்பார்த்தனர்.. அங்கே மனித கழிவுகள் மிதந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கிச்சனுக்கு வந்த ஊழியர்கள்தான் இதை முதலில் பார்த்து, பொறுப்பு தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.. அவர், கல்வி உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அவர்கள், திருவாரூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தனர்.

இதற்கு பிறகே வட்டார கல்வி அலுவலர் அறிவழகன், தாலுகா போலீசார் பள்ளிக்கே நேரடியாக வந்து விசாரணையை மேற்கொண்டனர்.. மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது... அந்த நாய், பள்ளி அருகே உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து குரைத்ததோடு அங்கேயே படுத்தும் கொண்டது..

3 பேரும் சிக்கினார்கள்

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வீட்டில் வசித்து வரும் செல்வம் மகன்களான விஜயராஜ் (32), விமல்ராஜ் (30) மற்றும் அதே ஊரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் செந்தில்குமார் (35) ஆகிய 3 பேரையும் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, "சனி, ஞாயிறு 2 நாள் விடுமுறை என்பதால், அதனை பயன்படுத்தி 3 பேரும் பள்ளிக்குள் சென்றுள்ளனர்.. கேட் ஏறி குதித்து உள்ளே சென்று கிச்சனில் பூட்டை உடைத்து அங்கிருந்த பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்..பிறகு தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறித்துள்ளார்கள்.. பள்ளியில் இருந்த வாழை மரங்களும் வெட்டப்பட்டு கிடந்தன.

கீரிப்பிள்ளை , கோழிக்கறி

பிறகு பள்ளிக்கு உள்ளேயே மது அருந்தியிருக்கிறார்கள்.. கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட கோழி, கீரிப்பிள்ளையை போதையிலேயே சமைத்து சாப்பிட்டுள்ளனர்.. போதை தலைக்கேறியதால், குடிநீர் தொட்டியில் மனித கழிவையும் கலந்துள்ளனர்.. தற்போது விசாரணைக்குள்ளாகியிருக்கும் விஜயராஜ், விமல்ராஜ் இருவருமே, திருவாரூர் டிஎஸ்பி அலுவலக போலீஸ்காரரின் சகோதரர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது" என்றனர்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் மோகன் சந்திரன் சொல்லும்போது, பள்ளியில் நடைபெற்ற சம்பவத்திற்கு காரணமான நபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டு, கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்...

காலி டேங்க்

2 நாட்கள் ஸ்கூல் விடுமுறை என்பதால், குடிநீர் தொட்டி நிரப்பப்படவில்லையாம்.. தொட்டியில் குடிநீர் இல்லாததால், குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை. தொட்டியின் அடிமட்டத்தில்தான் தண்ணீர் கிடந்துள்ளது.

தண்ணீரே இல்லாமல், திடீரென குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியதால், சமையலர்களுக்கு சந்தேகம் வந்து பார்த்தபோது, மலக்கழிவுகள் கிடந்துள்ளன. இதற்கு பிறகுதான் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+