குளிக்க போன செவிலியர்..மறைந்திருந்து வீடியோ எடுத்த ரஜினி சக்தி! அவர் பொருளையே எடுத்து செய்த சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூரில் செவிலியர் குளித்துக் கொண்டிருந்ததை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்த ரஜினி ரசிகர் மன்ற முன்னாள் நிர்வாகியான ரஜினி சக்தி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தன்னை வீடியோ எடுத்து இருப்பாரோ? என்ற சந்தேகத்தில் அவரது செல்போனையே வாங்கி தைரியமாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் அந்த செவிலியர். இந்த நிலையில் அவரது செல்போனில் வேறு சில பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை எடுத்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர் போலீசார்.

திருவாரூர் அருகே சீனிவாசபுரம் கொய்யா தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் ரஜினி சக்தி. 45 வயதான இவர் ரஜினி ரசிகர் மன்ற முன்னாள் மாவட்ட துணை செயலாளர் பதவி வகித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஆண் மகன் உள்ளார்.

Thiruvarur Crime News

இந்த நிலையில் திருவாரூர் நகர் பகுதியில் வசிக்கும் 25 வயது இளம்பெண் திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி அந்த பெண் வேலைக்குச் சென்று விட்டு இரவு 10 மணிக்கு வீடு திரும்பியுள்ளார்.

ரஜினி சக்தி

பின்னர் வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த பொது, அங்கு மறைந்திருந்த ரஜினி சக்தி அந்தப் பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அப்பொழுது ஏதோ சத்தம் கேட்கிறது என அலறி அடித்து அந்தப் பெண் அங்கு வந்து பார்த்த பொழுது யாரும் அங்கு இல்லை. அதனையடுத்து அடுத்த இரண்டு நாட்கள் கழித்து அந்தப் பெண்ணை ரஜினி சக்தி பின் தொடர்ந்து வந்து தொடர்ந்து பேச்சு கொடுத்துள்ளார்.

பெண் செவிலியர்

இதனால் சந்தேகம் அடைந்துள்ளார் அந்தப் பெண். இதற்கிடையே நேற்று திருவாரூரில் நடைபெற்ற உறவினர் வீட்டு விசேஷத்தில் அந்தப் பெண்ணும் ரஜினி சக்தியும் சந்தித்துக் கொண்டனர். அப்பொழுது அந்தப் பெண் ரஜினி சக்தியிடம் உங்களது செல்போனை கொடுங்கள் ஒரு போட்டோ எடுத்து கொண்டு தருகிறேன் எனக் கூறி அவரிடம் செல்போனை வாங்கியுள்ளார். உடனடியாக ரஜினி சக்தி செல்போனை அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார்.

ஆபாச வீடியோ

அப்பொழுது அந்தப் பெண் செல்போனை ஓபன் செய்து கேலரியில் உள்ள வீடியோக்களை பார்த்த பொழுது அதில் அவர் குளித்துக் கொண்டிருந்த வீடியோ இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக யாரிடமும் சொல்லாமல் நேரடியாக திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அந்த பெண் நேரடியாக சென்று செல்போனை கொடுத்து புகார் தெரிவித்துள்ளார்.

போலீஸ் அதிர்ச்சி

அதனையடுத்து அந்த செல்போனை பார்த்த பொழுது இந்தப் பெண் குளிக்கும் வீடியோ மட்டுமல்லாமல் மற்ற பெண்களின் வீடியோக்கள் அதிகமாக இருந்துள்ளதை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக திருவாரூர் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் அனைத்து மகளிர் காவல் துறையினர் சீனிவாசபுரம் கிராமத்திற்கு சென்று ரஜினி சக்தியை கைது செய்து அவர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடும் தண்டனை

ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி பல பெண்களை அருவருக்கத்தக்க வகையில் வீடியோவாக எடுத்து செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+