சரமாரியாக அறைந்த போலீஸ்.. காது கேட்கும் திறனை இழந்த கேரள மாணவி! ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை டெல்லி போலீசார் கடுமையாக தாக்கியதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். போலீஸ் தாக்குதலில் கேரளாவை சேர்ந்த டெல்லி பல்கலைக்கழக மாணவி அதிரா ஒரு காதில் கேட்கும் திறனை இழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எஸ்ஐஆர் நடவடிக்கையில் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக சொல்லி தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும் மாணவர் அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

Rahul Gandhi Delhi Police Assaulted Protesters

தடியடி

இதற்கிடையே போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட சில சிறார்களிடம் இருந்து செல்போன் பிடுங்கப்பட்டதாகவும், பணம் இல்லாமல் வீட்டுக்கு செல்ல முடியாத நிலையில் விடுவிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், நேற்றைய தினம் நடந்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இன்றைய தினம் போலீசார் தாக்குதலால் பாதிக்கப்பட்ட போராட்டக்காரர்களுடன் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டெல்லி போலீசார் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.

காது கேட்கும் திறன் போச்சு

போராட்டத்தின் போது தன்னை கைது செய்த போலீசார், பேருந்துக்குள் வைத்து தன்னை தாக்கியதாக அதிரா குற்றம்சாட்டியுள்ளார். பெண்களை கைது செய்யும்போது பெண் போலீசார் உடன் இருக்க வேண்டும் என்று கேட்டதாகவும், ஆனால் பேருந்தில் பெண் போலீசார் யாரும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்துக்கு வெளியே பேருந்து நிறுத்தப்பட்டபோது, போலீசார் தனது கன்னத்தில் பலமுறை தாக்கியதாகவும், இதனால் கண்ணிலும் காதிலும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், "போலீசார் அதிராவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் ஒரு காதில் கேட்கும் திறனை அதிரா இழந்துள்ளார். முன்பு பார்வை இழந்த ஒரு இளைஞரை உங்களுக்குக் காட்டினேன். இப்போது இந்த மாணவி ஒரு காதில் கேட்கும் திறனை இழந்துள்ளார்" என்றார்.

தாக்குதல்

தேசிய மாணவர் சங்கத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணும் போலீசார் தன்னை தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார். போராட்டக்காரர்கள் மூன்று பேருந்துகளில் ஏற்றப்பட்டபோது, ஒவ்வொரு பேருந்திலும் 30 முதல் 40 பேர் இருந்ததாக அவர் தெரிவித்தார். பேருந்தை தடுத்து நிறுத்த முயன்றபோது, யாதவ் என்ற பெண் போலீஸ் அதிகாரி தனது கழுத்தை பிடித்து இருக்கையில் தள்ளியதாகவும், முகத்திலும் காதுக்கு அருகிலும் நகங்களால் கீறியதாகவும் அவர் கூறியுள்ளார். தான் எதிர்த்தபோது பலமாக அறைந்ததாகவும் குற்றம்சாட்டினார்.

ராகுல் காந்தி

மற்றொரு போராட்டக்காரர், தன்னையும் நாடாளுமன்ற காவல் நிலையத்தில் 15 முதல் 20 போலீசார் தாக்கியதாக தெரிவித்துள்ளார். அன்கித் கசானா என்ற காவலர், காவல் நிலையத்திலிருந்து டெல்லியின் புறநகர் பகுதிக்கு அழைத்து செல்லும்போதும் தாக்கியதாக அவர் குற்றம்சாட்டினார். மாணவர்கள் தங்களுக்கு நேர்ந்த சம்பவங்களை வீடியோவாக பதிவு செய்து காங்கிரஸிடம் வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார். அந்த ஆதாரங்களை கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இப்படி நாளுக்கு நாள் தலைநகர் டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பதற்றமான ஒரு சூழலே நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+