இடைத் தேர்தல் ரத்து எதிரொலி.. திருவாரூர் மக்களுக்கும் ரூ. 1000 பொங்கல் பரிசு!
திருவாரூர்: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தானதால் பொங்கல் பரிசு தொகை ரூ 1000 கிடைக்கும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
திருவாரூர் தொகுதி கருணாநிதியின் தொகுதியாகும். இங்கு இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் எம்எல்ஏவாக இருந்தார். இந்நிலையில் அவர் வயது மூப்பு காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மரணமடைந்தார்.

வேட்பாளர்கள்
இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு தேர்தல் வரும் 28-ஆம் தேதி என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் திமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகிய கட்சிகள் தங்கள் தரப்பில் வேட்பாளர்களை நிறுத்தின.

கோரிக்கை
இந்த நிலையில் கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகள் இன்னும் முடியாததால் இந்த இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

பரிசு பொருட்கள்
இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனிடையே தமிழகத்தில் ரூ. 1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு பொருட்களை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

பொங்கல் பரிசு
தேர்தல் நடத்தை அமலில் இருந்ததால் திருவாரூர் அந்த திட்டம் வழங்கப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தேர்தலே ரத்து செய்யப்பட்டுவிட்டதால் திருவாரூர் தொகுதிக்கு ரூ 1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகை வழங்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications