திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் மாற்றுத்திறனாளிகளுக்காக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜூன் மாதம் முதல் வியாழக்கிழமை 5-ந் தேதி காலை 11 மணிக்கு திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "திருவாரூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜூன் மாதம் முதல் வியாழக்கிழமை 5-ந் தேதி காலை 11 மணிக்கு திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

அதேபோல் இரண்டாம் வியாழக்கிழமை 12-ந்தேதி காலை 11 மணிக்கு மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இந்த சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி கோட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற இதுவரை விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் தங்களது இருப்பிட முகவரிக்கான ஆதாரம், குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் கூட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா இருப்பின் தொகுப்பு வீடு கோருபவர்கள், நூறு நாள் அட்டை கோருபவர்கள் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களும் அளிக்கலாம். இதற்கு முன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின், அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சிறப்பு குறை தீர்க்கும் நாளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications