மன்னார்குடி சேர்மன் பதவி! எதிரும் புதிருமாக மன்னை நாராயணசாமி வழித்தோன்றல்கள்! யார் கை ஓங்கும்?
திருவாரூர்: மன்னார்குடி நகராட்சி சேர்மன் பதவிக்கான போட்டியில், திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்த மறைந்த மன்னை நாராயணசாமி வாரிசுகள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறதாம்.
இதனால் யாரை வேட்பாளராக களமிறக்குவது என்பதில் மாவட்டச் செயலாளர் தரப்புக்கும், கட்சித் தலைமைக்கும் சற்று குழப்பம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
டெல்டா மாவட்டங்களில் மன்னார்குடி முக்கியமான நகராட்சியாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை பெரியார்
தஞ்சை பெரியார் என பெருமையுடன் அழைக்கப்பட்ட மன்னை நாராயணசாமி திமுக ஆட்சிக்காலத்தில் முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்தவர். அண்ணா, கருணாநிதி என அனைவருடனும் சரிக்கு சரியாக அமர்ந்து வாதிட்டவர். தன்வாழ்நாளின் இறுதி வரை சுயமரியாதை சுடராக திகழ்ந்த இவரை சிறப்பிக்கும் பொருட்டு, மன்னார்குடியில் அரசுப் பள்ளி உட்பட பல்வேறு ஸ்தாபனங்களுக்கு மன்னை நாராயணசாமியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மன்னார்குடி சேர்மன்
இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த தஞ்சை பெரியாரின் பேரன் தான் சோழராஜன். திமுக மாணவரணி மாநில துணைச் செயலாளராக உள்ள இவர், மன்னார்குடி நகராட்சி சேர்மன் பதவிக்கான ரேஸில் இருக்கிறார். இதற்காக டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. மூலம் காய் நகர்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேபோல் மன்னை நாராயணசாமியின் தம்பி மகளான மீனாட்சி சூர்யபிரகாசும் மன்னார்குடி சேர்மன் பதவியில் அமர காய் நகர்த்தி வருகிறார்.

கவுன்சிலர் சீட்
இவருக்கு மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் தரப்பு ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட இவர் சீட் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரை தவிர்த்து இன்னும் பல முக்கியப் பிரமுகர்களும் மன்னார்குடி சேர்மன் ஆக வேண்டும் என்ற கனவில் கவுன்சிலர் சீட்டுக்கு விருப்பமனு கொடுத்துவிட்டு காத்திருக்கின்றனர்.

பொறுப்பு அமைச்சர்
இதனிடையே இந்த விவகாரத்தில் திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரான சக்கரபாணி பெரிதாக தலையிடுவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மாவட்டச் செயலாளராக உள்ள பூண்டி கலைவாணனுக்கு யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி எளிது என்பது தெரியும் என்பதால் அவரது முடிவில் தலையிடுவது சரியாக இருக்காது என அவர் கருதுவதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications