திருவாரூரை கலக்கிய உதயநிதி..! குளம் தூர்வாரும் பணிகள் ஜரூர்..!
Recommended Video
திருவாரூர்: திருவாரூரில் திமுக இளைஞரணி சார்பாக குளம் தூர்வாரும் பணியை தொடங்கிவைத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
சென்னையில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர, மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் இளைஞரணியினர் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்துக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணியினர் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் குளம் தூர்வாரும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. திருவாசல் குளத்தில் தூர்வாரும் பணியை தொடங்கிவைக்கச் சென்ற உதயநிதி ஸ்டாலின், ஜே.சி.பி.இயந்திரத்தில் ஏறி அதை இயக்கத் தொடங்கினார். இதனால் உற்சாகமடைந்த திமுக இளைஞரணியினர் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக இளைஞரணியினர் ஆர்வமுடன் தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை சீரமைத்து வருவதாகவும், இளைஞரணியில் தற்போது தாம் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை எனவும் தெரிவித்தார். மேலும், இதேபோல் இளைஞரணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளையும் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக கூறினார்.
திருவாசலில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு திருவாரூர் செல்லும் வழியில் பள்ளி மாணவ, மாணவிகளை கண்டவுடன் காரை நிறுத்தச்சொல்லி அவர்களுக்கு கைகொடுக்கவும் உதயநிதி தவறவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications