Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாத்தா பார்முலாவில் உதயநிதி.. திருவிழா கோலத்தில் திருவாரூர்.. டெல்டாவை தட்டி தூக்கும் திமுக

Subscribe to Oneindia Tamil

ன்திருவாரூர்: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. திமுகவை பொறுத்தவரை சென்னை மற்றும் டெல்டா மண்டலத்தில் மிகுந்த வலிமையுடன் இருக்கும். கருணாநிதியின் சென்டிமென்டை பாலோ செய்து அவரின் பேரன் திருவாரூர் தொகுதியில் உதயநிதி போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. அதனுடன் டெல்டாவில் முக்கிய தலைவர்களை களமிறக்கி பவர்புல்லான திட்டத்துடன் களமிறங்கியுள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. 4 முனைப் போட்டியால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

udhayanidhi-stalin-udhyanidhi-to-contest-in-thiruvaur-constituency-dmk-s-strong-plan-to-delta

திமுக டெல்டா கோட்டை

ஆட்சியைத் தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அரசு ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மண்டல வாரியாக பிரம்மாண்ட மாநாடுகளை நடத்தி வருகிறது. அதிமுக கூட்டணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக மற்றும் ஓ. பன்னீர்செல்வத்தை தன்பக்கம் திமுக இழுத்துவிட்டது.

மண்டல வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களையும் திமுக நியமித்துள்ளது. பொதுவாக திமுக என்றால் சென்னை மற்றும் காவிரி டெல்டா மண்டலங்களில் அசைக்க முடியாத செல்வாக்குடன் இருக்கும். மு.க. ஸ்டாலின் சென்னையில் போட்டியிட்டாலும், கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். 2026 தேர்தலில் ஸ்டாலின் மீண்டும் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

திருவாரூரில் உதயநிதி [Udhyanidhi Stalin]

ஆனால் உதயநிதி ஸ்டாலின், தன் தாத்தா சென்டிமென்டை பின்தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். 2026 தேர்தலில் உதயநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. திமுக சார்பில் டெல்டாவிற்கு மேலும் பல அதிரடி திட்டங்களை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2021 தேர்தலில் டெல்டா மண்டலத்தில் மொத்தமுள்ள 33 தொகுதிகளில் 29 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. இந்தமுறை அங்கு 6 மாவட்டங்களையும் மொத்தமாக கைப்பற்ற திமுக திட்டமிட்டுள்ளது. தலைநகரத்தில் ஒருவர், சொந்த ஊரில் ஒருவர் என்று முடிவு செய்துள்ளனர். உதயநிதி திருவாரூர் செல்லும்பட்சத்தில் அங்குள்ள சிட்டிங் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் நன்னிலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

பக்கா ஸ்கெட்ச்

டிஆர்பி ராஜா மன்னார்குடி தொகுதியிலும், அதிமுகவில் இருந்து திமுக வந்துள்ள வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதியின் பூர்விகம் நாகப்பட்டினம் மாவட்டமாக இருந்தாலும், அவர் வளர்ந்தது எல்லாம் திருவாரூர் தான். திருவாரூர் தொகுதியில் அவர் 62.9 சதவீதம் வாக்குகளுடன் சாதனை வெற்றி பதிவு செய்துள்ளார்.

அந்த தொகுதியில் இதுவரை அதிமுக வெற்ற பெற்றதில்லை. திருவாரூரில் உதயநிதி போட்டியிட்டால் அவர் எளிதில் வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது. உதயநிதி போட்டியிடுவதால் அதன் தாக்கம் மண்டலம் முழுவதும் இருக்கும் என அறிவாலயம் திட்டமிட்டுள்ளது. உதயநிதி சொந்த ஊரில் போட்டியிட போவதாக வெளியாகியுள்ள தகவல் டெல்டா உடன்பிறப்புகளிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+