சார் வீடு வாடகைக்கு இருக்கா?.. உள்ளே சென்ற மர்ம நபர் செய்தது என்ன.. திருவாரூரில் பரபரப்பு
திருவாரூர்: திருவாரூர் அருகே வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து வயதான தம்பதிக்கு விஷம் கொடுத்து நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சி விஷ்ணுத்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் செல்லப்பிள்ளை. அவரது மனைவி சகுந்தலா. இவர்களுக்கு சொந்தமான வீடு ஒன்று காலியாக இருப்பதால் வீட்டின் வெளியே டூலெட் போர்டை மாட்டி வைத்திருந்தனர்.
இதை பார்த்து விட்டு 5 நாட்களுக்கு முன்பு ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் வந்து வீடு கேட்டுள்ளார். இந்த நிலையில் அவரே நேற்று இரவும் செல்லப்பிள்ளை வீட்டுக்கு வந்துள்ளார்.

வரும் முன் காப்போம்
அப்போது உடல்நலக்குறைவால் வீட்டில் சகுந்தலா படுத்திருந்தார். உடனே என்னம்மா உடம்பு சரியில்லையா. இந்த மருந்தை சாப்பிடுங்கள், குணமாகிடும் என அவருக்கு கொடுத்துள்ளார். அதுபோல் செல்லப்பிள்ளைக்கு வரும் முன் காப்போம் என கூறி அதே மருந்தை கொடுத்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில்
இதையடுத்து இருவரும் மயங்கி விழுந்தவுடன் வீட்டில் இருந்த 6 சவரன் நகையை எடுத்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் உள்ள இருவரும் வெளியே வராததை அடுத்து சந்தேகத்தின்பேரில் உள்ளே சென்று பார்த்தனர்.

சகுந்தலா பலி
அப்போது அரை மயக்க நிலையில் இருந்த செல்லப்பிள்ளை நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர் இருவரையும் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சகுந்தலா உயிரிழந்தார். செல்லப்பிள்ளை சிகிச்சை பெற்று வருகிறார்.

4 பேர் நோட்டம்
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், மோப்ப நாயை கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், செல்லப்பிள்ளையும் சகுந்தலாவும் தனியாக வசிப்பதை 4 பேராக சேர்ந்து கண்காணித்துள்ளனர்.

கழுத்தில் உள்ள நகைகள்
அவர்கள் வீட்டுக்கு யார் வருகிறார்கள், எங்கு செல்கிறார்கள், உதவிக்கு யாராவது வருகிறார்களா உள்ளிட்ட விவரங்களை சேகரித்துள்ளனர். இதையடுத்து வீடு கேட்பது போல் சென்று வீட்டில் இருக்கும் பொருட்கள், சகுந்தலாவின் கழுத்தில் இருந்த நகைகளை நோட்டமிட்டுள்ளனர்.

கசாயம்
பிறகு அவர்கள் இருவருக்கும் காய்ச்சல் என தெரிந்தே நேற்று இரவு வீட்டுக்குள் சென்று அரசு வழங்கும் கசாயத்தில் விஷத்தை கலக்கி, மருந்து என கூறி குடிக்க வைத்துள்ளனர். பின்னர் நகைகளை திருடிச் சென்றுள்ளனர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications