எப்படி தாக்க வேண்டும் என சொல்கிறேன்.. காத்திருங்கள்.. தொண்டர்களுக்கு அழகிரி அட்வைஸ்
தேர்தல் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன் அதுவரை காத்திருங்கள் என்று தனது ஆதரவாளர்களுக்கு மு.க அழகிரி அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை: தேர்தல் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன் அதுவரை காத்திருங்கள் என்று தனது ஆதரவாளர்களுக்கு மு.க அழகிரி அறிவுறுத்தி உள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தார். இதனால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. இதற்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் அழகிரி போட்டியிடவோ, அவரது சார்பாக யாரவது போட்டியிடவோ வாய்ப்புள்ளதாக தகவல் வருகிறது.

இந்த நிலையில் திண்டுக்கல்லில் மு.க.அழகிரி பேரவை சார்பில் கருணாநிதிக்கு புகழஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் மு.க அழகிரி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
[குருநாதா இதுக்கு ஒரு முடிவே கிடையாதா.. இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை! ]
அப்போது பேசிய அழகிரி, திமுகவில் மாற்றம் செய்ய நேரம் வந்துவிட்டது. இது மாற்றத்திற்கான நேரம். திமுகவில் இருந்து என்னை சதி செய்து வெளியேற்றிவிட்டார்கள். நான் தொண்டர்களுக்காக பேசினேன். அதனால் வெளியேற்றினார்கள். நான் பதவிக்காக அலைபவனில்லை.
என்னுடைய ஆட்களை வலைவீசி அவர்கள் பக்கம் இழுத்து வருகிறார்கள். பிள்ளை பிடிப்பவர்களை போல ஆட்களை பிடிக்கிறார்கள். ஆனாலும் அங்கு இப்போது ஆட்களே இல்லை.
தேர்தல் வரும்போது எப்படி தாக்க வேண்டும் என சொல்கிறேன்.தேர்தல் வரை காத்திருங்கள்.கருணாநிதியோடு என்னை ஒப்பிட்டு பேசவேண்டாம். தேர்தலின் போது செய்ய வேண்டியதை சொல்கிறேன், என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications