திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த தம்பதி.. 'ஒரே நாளில்'.. கனவில் கூட இப்படி நடக்கக்கூடாது

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஹேமா மற்றும் பிரசாந்த் ஆகியோர் காதலித்து வந்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணமான இரண்டு மாதத்தில் இவர்கள் வாழ்வில் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத சம்பவம் நடந்துள்ளது. வாழ்க்கையை ஒரே நாளில் அடுத்தடுத்து முடித்துக் கொண்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

இளம் வயதில் வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று தேர்வு செய்யும் அதேநேரத்தில் தான், யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதையும் தேர்வு செய்கிறார்கள். இளம் வயதில் ஒருவரை பார்த்த உடன் வரும் ஈர்ப்பை காதல் என்று புரிந்து கொள்ளும் இளைஞர்கள் மற்றும் பெண்கள், அவர்களைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். கண்மூடித்தனமான காதலால் அவர்களின் குணம், அவர்களின் பொருளாதாரம், அவர்களின் குடும்பம் என எதையும் பார்ப்பது இல்லை.

tiruvarur marriage love

இறுதியாக திருமணத்திற்கு பிறகு பார்க்கும் போது விரக்தியையும் வெறுமையையும் சந்திக்கிறார்கள். வாழ்க்கை குறித்து மனப்பக்குவம் வருவதற்குள் வாழ்க்கையையே முடித்துக் கொள்கிறார்கள். இன்றைய 2 கே கிட்ஸ் வாழ்க்கையில் துன்பம் என்றால் என்ன, விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை, சகிப்பு தன்மை , பொறுமை இவற்றை கடைசி வரை கற்றுக்கொள்ளாமல் வாழ்க்கை இழக்கிறார்கள். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆட்டுர் பகுதியை சேர்ந்தவர் சமரசபாண்டி என்பவருடைய மகன் பிரகாஷ்(வயது23). இவர் பெண்களுக்கு குழுக்கள் மூலம் கடன் வழங்கும் நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வந்தார். பிரகாஷும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள நீடூர் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் மகள் ஹேமா (21) என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு வீட்டில் பிரகாஷும், ஹேமாவும் தூங்கி கொண்டு இருந்தனர். நேற்று அதிகாலை பிரகாஷ் கண் விழித்து பார்த்தபோது வீ்ட்டில் உள்ள அறையில் அவருடைய மனைவி ஹேமா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் கூச்சலிட்டார். உடனே சம்பவ இடத்துக்கு சென்ற அக்கம்பக்கத்தினர் தூக்கில் இருந்து ஹேமாவை மீட்டார்கள்,

அப்போது திடீரென ஹேமா தூக்கில் தொங்கிய கயிறை எடுத்துக்கொண்டு அருகே இருந்த புளியமரத்துக்கு சென்ற பிரகாஷ் அங்கு அதே கயிற்றால் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி பாஸ்கரன் மற்றும் போலீசார் பிரகாஷ் மற்றும் ஹேமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரகாஷ்-ஹேமா உயிரைவிட்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் திருமணம் செய்த 2 மாதங்களில் கணவன்-மனைவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்தபகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+