"கை" வெச்சுட்டாங்க.. அதுவும் அந்த "மகாலட்சுமி".. கூனிக்குறுகிய நபர் பகீர்.. திணறிய திருவாரூர் போலீஸ்
காதல் விவகாரத்தில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்
திருவாரூர்: மாணவிக்கு லவ் டார்ச்சர் தருவதாக எழுந்த புகார் ஒன்று, கடைசியில் மரணம் வரை கொண்டுசென்றுவிட்டது.. என்ன காரணம்?
திருவாரூர் மாவட்டம் கொரடாசசேரி அருகே உள்ளது மடப்புரம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் தொழிலாளி ராஜா.. இவரது மனைவி மாதா.. இவர்களது மகன் ராகுல்ராஜ்.. 22 வயதாகிறது.
இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.. இந்த சிறுமியின் அப்பா, ஒரு கட்டிட கூலி தொழிலாளி.. ராகுல்ராஜ் விரட்டி விரட்டி காதலிப்பது, சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது..

அவமானம்
அதனால், சிறுமியின் குடும்பத்தினர் திருவாரூர் அனைத்து மகளிர் போலீசில் இதை பற்றி புகார் தந்துள்ளனர்.. அந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாரணைக்கு ராகுல்ராஜை அழைத்திருந்தனர்.. விசாரணையின்போது, பெண் போலீசார் ராகுல் ராஜை அடித்ததாக சொல்லப்படுகிறது.. பிறகு, விசாரணை இரவு வீட்டுக்கு வந்துள்ளார்.. ஆனால், பெண் போலீஸாரிடம் அடிவாங்கிய அவமானத்தில் மனம் நொந்துபோன ராகுல்ராஜ், வீட்டிலேயே விஷத்தை எடுத்து குடித்து மயங்கிவிட்டார்..

ராகுல்ராஜ்
இந்த விஷயம் தெரிந்து ராகுல்ராஜின் குடும்பத்தினர் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு ராகுல்ராஜை அனுமதித்தனர்.. ஆனாலும், ராகுல்ராஜ் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.. இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஒன்றுதிரண்டு, திருவாரூர் எஸ்பி ஆபீசுக்குள் குபுகுபுவென புகுந்துவிட்டனர். தங்களின் மரணத்துக்கு நியாயமும் கேட்டனர்.. அதற்குள் இந்த விஷயம் கேள்விப்பட்டு, சம்பவ இடத்துக்கு திருவாரூர் டிஎஸ்பி விரைந்து வந்தார்.. அவர்களை சமாதானப்படுத்தி, திருவாரூர் தாலுகா ஸ்டேஷனுக்கும் அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்..

20,000
அப்போது ராகுல்ராஜின் தந்தை தந்த புகார், போலீசாரை அதிர செய்துவிட்டது.. ராகுல்ராஜ் மீதான புகார் வந்ததுமே, மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள, சப் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டாராம்.. அதற்கு ரூ.5,000 லஞ்சப்பணத்தை ராகுல்ராஜ் குடும்பத்தினர் தந்துள்ளனர்.. அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு ராகுல்ராஜை, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று, விசாரணை என்ற பெயரில் மகளிர் போலீசார் அடித்து அவமானப்படுத்தியதாகவும், இந்த அவமானம் தாங்க முடியாமல் தனது மகன் விஷம் அருந்தி இறந்துவிட்டார், இதற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் தான் காரணம் என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

பரபரப்பு
மகாலட்சுமி, மற்றும் சம்பந்தப்பட்ட பெண் போலீசாரை கைது செய்தால்தான், ராகுல்ராஜ் உடலை வாங்குவோம் என்று கூறி, குடும்பத்தினர், உறவினர்கள் ஈடுபட்டனர்.. இதனால், சமாதானம் செய்ய வந்த அதிகாரிகள் அதிர்ந்து போயுள்ளார்கள்.. இந்த விஷயத்தில் அதிகாரிகள் என்ன முடிவெடுக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.. எனினும் திருவாரூரில் இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பி வருகிறது.

வார்னிங்
17 வயது சிறுமியான மைனர் பெண்ணை காதலித்தால், தண்டனைக்குரிய குற்றம் என்பதை சட்டப்பூர்வமாக எடுத்து சொல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து ராகுல்ராஜை சிறையில் அடைத்திருக்கலாமே அல்லது ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து கண்டித்து அனுப்பியிருக்கலாமே, அப்படி செய்திருந்தால் இதுபோன்ற வீண் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்காது என்கிறார்கள்.. அரை நிர்வாணமாக்கி ராகுல்ராஜை அடித்ததுடன், இந்த கேஸில் அவரை விடுவிக்க 20 ஆயிரம் லஞ்சமும் கேட்டுள்ளதும், அதில் 5 ஆயிரத்தை பெற்றுள்ளதும் வெட்டவெளிச்சமாகி உள்ள நிலையில், துறை ரீதியான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது எடுக்க வேண்டும் என்று பரவலான கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications