எப்படி உங்களால சாப்பிட முடியுது.. திரையுலகுக்கு டெல்டா பெண்ணின் சுளீர் கேள்வி!
நடிகர் சங்கம் எந்த உதவியும் செய்யவில்லை என டெல்டா மக்கள் கூறுகிறார்கள்.
Recommended Video

திருவாரூர்: "புயல் அடிச்சி கஷ்டப்பட்டுட்டு கிடக்கிறோம், மனசாட்சின்னு உங்களுக்கு இல்லையா? சாப்பாட்டில நீங்க எப்படி கையை வெக்கிறீங்க-ன்னு பாப்போம்" என்று ஒரு பெண் தமிழ் சினிமா நடிகர், நடிகைகளை கேள்விகளாலே துளைத்தெடுத்துள்ளார்.
புயல் பாதிக்கப்பட்டு ஒரு வார காலம் ஆகியும், அரசு தரப்பில்தான் சரியான உதவி இல்லை, நடிகர்கள் தரப்பிலிருந்தாவது முறையான உதவிகளும், உரிய நிவாரணங்களும் கிடைக்கும் என்று டெல்டா மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தங்களுக்கு யாரும் உதவிக்கு வராததால் கடும் கோபத்திலும் உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், தனது கோபத்தை கொட்டி நடிகர், நடிகைகளை கேள்வி கேட்டுள்ளார். அந்த ஆடியோவில் அவர் பேசியுள்ளதாவது:

நடிகர் சங்கம் எங்கே?
"இத்தனை நாளாச்சு, யாராவது நிவாரணம்ன்னு இந்த பக்கம் வந்தீங்களா? 10 புயல் அடிச்சாகூட நாம் மீண்டு வந்துவிடுவோம். அந்த அளவுக்கு நமக்கு திறன் இருக்கு. உலகத்துக்கே சாப்பாடு போட்ட நாங்க இன்னைய வரைக்கும் கஷ்டப்பட்டு இருக்கும்போது, நடிகர் சங்கம் உட்பட ஒரு நடிகரையும் காணோம்.இதுவே கேரள வெள்ளத்தின்போது, அவ்வளவு பணத்தையும் மடியேந்தி வாங்கிட்டு போய் அங்கே தந்தோம்.

கோடிகளை கொடுத்தீங்க
ஆனா இதுவரைக்கும் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், பட்டுக்கோட்டை பக்கம் எல்லாம் ரொம்ப சேதமாயிருக்கு. ஆனா டிவியில இந்த பக்கமெல்லாம் பாதிப்பு அவ்வளவா இல்லைன்னு சொல்றாங்க. இதுவே கேரளா வெள்ளம்னு சொன்னதும், டக்குனு கோடி ரூபாய்களை தூக்கிட்டு ஓடுனீங்க?

குறைஞ்சி போய்ட்டோமா?
சாப்பாடு போட்டவங்க இன்னைக்கு அழிஞ்சிக்கிட்டு இருக்காங்களேன்னு மனசாட்சி இல்லை? உங்களுக்கெல்லாம் நன்றி, விசுவாசமே கிடையாதா? அப்படி எந்த விதத்துல கேரளாவை விட நாங்க குறைஞ்சி போயிட்டோம்? முதல்ல மழை இல்லாம கஷ்டப்பட்டோம்? இப்ப புயல் அடிச்சி கஷ்டப்படறோம்.

மனசாட்சி வேண்டாமா?
சாப்பாட்டில நீங்க எப்படி கையை வெக்கிறீங்க-ன்னு பாப்போம். நாங்க மீண்டு வந்துடுவோம். அதுக்காக பொட்டலம் போடுவீங்களான்னு 'ஆ'ன்னு பார்த்துட்டு நாங்க இல்லை. இருந்தாலும் உங்களுக்குன்னு மனசாட்சி வேண்டாமா?என்று கேட்டுள்ளார்.

ஆதங்கம்
இந்த பெண்ணின் ஆடியோ பேச்சு தற்போது வைரலாகி வருவதுடன், அவரது பேச்சில் உள்ள நியாயமும், ஆதங்கமும் சரியென்றே பேசப்பட்டு வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications