தீவிரமாகப் பரவும் கொரோனா திருப்பதியில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் பாதியாக குறைப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் எண்ணிக்கையையும் பாதியாக தேவஸ்தானம் குறைத்துள்ளது. 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தினசரி தரிசனம் செய்ய முடியும்.
திருப்பதி: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் எதிரொலியாக திருப்பதியில் ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இனி தினசரியும் 15ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும்.
ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். தற்போது அது பாதியாக குறைக்கப்பட்டு 15 ஆயிரம் பக்தர்களே முன்பதிவு செய்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை ஏழுமலையானின் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. கோவிலில் கைங்கரியங்கள் தனிமையில் நடத்தப்பட்டன. அதன்பிறகு ஜூன் மாதம் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலத்தில் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. எனவே தேவஸ்தானம் கடந்த 12ஆம்தேதி முதல் திருப்பதியில் அளிக்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்களை ரத்து செய்தது. தினசரி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டு வழங்கப்பட்டு வந்த டோக்கன்களை ரத்து செய்யப்பட்டதால் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது.
இந்நிலையில் ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் எண்ணிக்கையையும் பாதியாக தேவஸ்தானம் குறைத்துள்ளது.
ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். தற்போது அது பாதியாக குறைக்கப்பட்டு 15 ஆயிரம் பக்தர்களே முன்பதிவு செய்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்த நடைமுறை மே மாதம் முதல் 1ஆம்தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இதற்கான விவரங்கள் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.
திருப்பதியில் ஞாயிறன்று 27,822 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 12,062 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.07 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications