திருமலையில் அடுத்தடுத்து சிக்கும் சிறுத்தைகள்.. தடியோடு பக்தர்கள் பாதயாத்திரை.. கோவிந்தா முழக்கம்
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் பாதையாத்திரையாக பக்தர்கள் செல்லும் நடைபாதையில் சுற்றி வந்த மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. இதுவரை 5 சிறுத்தைகள், கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பேருந்து மூலம் மட்டுமல்லாது அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு பாதை வழியாக பாதையாத்திரையாக சென்றும் ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். பாதை யாத்திரை செல்லும் பகுதி வனப்பகுதி என்பதால் அவ்வப்போது வன விலங்குகளும் வந்து செல்லும். சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளின் நடமாட்டமும் இருக்கும்.

கடந்த ஜூன் மாதம் ஆந்திர மாநிலம், ஆதோனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். இரவு சுமார் 10 மணியளவில், 7வது மைல் அருகே சிறுத்தை ஒன்று கவுசிக் என்ற 3 வயது சிறுவனை கவ்விக்கொண்டு ஒரு புதருக்குள் ஓடியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர் கூச்சலிட்டு கத்தியபடியே சிறுத்தையின் பின்னால் ஓடினர். அங்கு காவல் பணியில் இருந்த தேவஸ்தான கண்காணிப்பு படையினரும் டார்ச் லைட் அடித்தபடி சிறுத்தையை பின் தொடர்ந்து ஓடினர். இதனால் சிறுவனை கீழே போட்டு விட்டு சிறுத்தை ஓடிவிட்டது. காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன், திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். இதனையடுத்து சிறுவனை தாக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்து அடர் வனப்பகுதியில் விட்டனர்.
கடந்த மாதம் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் பாத்திரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்த சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்றது. லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு அருகில் சிறுமியின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. சிறுத்தை தாக்கி சிறுமி பலியான விவகாரம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அலிபிரி முதல் காலிகோபுரம் வரை உள்ள பகுதியில் மூன்று இடங்களிலும், காலிகோபுரத்தில் இருந்து ஏழாவது மைல் வரை உள்ள பகுதியில் ஒரு இடத்திலும் ,திருப்பதியில் இருந்து திருமலைக்கு வாகனங்களில் செல்ல பயன்படுத்தும் சாலையில் 38 வது வளைவு அருகே ஒரு இடத்திலும் சிறுத்தை நடமாட்டத்தை தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் அடையாளம் கண்டனர்.

திருமலை திருப்பதியில் முதலாவது பாதையில் இருக்கும் யானை வளைவு அருகே சிறுத்தை புலியும் , ஸ்பெஷல் டைப் காட்டேஜ் பகுதியில் கரடி நடமாட்டமும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர முள்ளம் பன்றி , காட்டுப்பன்றிகள் , புனுகு பூனைகள் ஆகியவை நடமாட்டம் இரவில் இருப்பது தானியங்கி முறையில் படம் பிடிக்கும் ட்ராப் கேமராக்களில் பதிவாகின. இதனால் சிறுத்தைகளை பிடிக்க 6 கூண்டுகள் வைக்கப்பட்டன. அதன்படி திருப்பதி கோயில் மலைப்பாதையில் சுற்றித் திரிந்த சிறுத்தை வனத்துறையினர் கூண்டில் சிக்கியது. 4 சிறுத்தைகள் பிடிபட்டுள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்தது.
திருப்பதி நடைபாதையில் சுற்றி வந்த மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. இதுவரை 5 சிறுத்தைகள், கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக கைத்தடி கொடுக்கும் திட்டத்தை தேவஸ்தான நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதுவரை 3 சிறுத்தைகள் சிக்கியிருந்தாலும் கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் கூட்டமாக இணைந்தே நடந்து செல்ல வேண்டும் என்று வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதனையடுத்து பாதையாத்திரையாக செல்லும் பக்தர்கள் கைகளில் தடியோடு கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டுக்கொண்டு பாதையாத்திரையாக நடந்து செல்கின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications