Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதியில் நமாஸ் செய்த சென்னை கார் டிரைவர்.. எச்சரிக்கை விடுத்த தேவஸ்தானம்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி திருமலையில் போராட்டம், பொதுக் கூட்டம், வேற்று மதப் பிரசாரம், தொழுகை போன்றவற்றில் ஈடுபடக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் திருப்பதியில் தொழுகை செய்யும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து, பக்தர்கள் புகார் தெரிவித்த நிலையில், கார் ஓட்டுநரைப் பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர்.

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடாச்சலபதியை தரிசனம் செய்வதற்காக உலகம் முழுவதும் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்து வருகின்றனர். பண்டிகை மற்றும் சிறப்பு விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். தினந்தோறும் ஏராளமான மக்கள் இங்கு வந்து பெருமாளை தரிசனம் செய்வதால் எப்போது கூட்டம் அதிகரித்தே காணப்படும்.

a-muslim-man-offering-prayers-at-tirumala-tirupati-has-sparked-controversy

பொதுவாகவே திருமலை திருப்பதியில் பல்வேறு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் திருப்பதியில் பக்தர்களுக்குப் புனித பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பான விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கண்காணிப்பு பணிகள் மற்றும் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்துக்களைத் தவிர பிற மதத்தினர் திருமலை திருப்பதியில் பணி அமர்த்தப்படக் கூடாது, கோயில் தொடர்பான அனைத்துப் பணிகளையும் இந்துக்களே செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் கொண்டு வரப்பட்டன. அதேபோல, திருப்பதி மலையில் டிரோன் கேமரா பறக்க விடத் தடை உள்ளது. வேற்று மதப் பிரசாரம், தொழுகை, போராட்டம், பொதுக்கூட்டம் நடத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பதிக்கு வந்த கார் டிரைவர் ஒருவர் தொழுகை செய்யும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வந்த புகாரையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் டிரைவரைப் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் வாடகைக்கு எடுத்து திருப்பதிக்கு வந்துள்ளனர். நேற்று காலை திருப்பதிக்கு வந்த குடும்பத்தினர் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காகச் சென்றுள்ளனர். அப்போது, அந்த கார் டிரைவர் பாபவிநாசம் சாலையில் உள்ள மண்டபத்தில் திடீரென தொழுகையில் ஈடுபட்டுள்ளார்.

இதைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியுள்ளது. திருப்பதியில் கார் டிரைவர் தொழுகை நடத்தியது குறித்து, அவ்வழியாகச் சென்ற பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் புகார் செய்துள்ளனர். இதையடுத்து, தேவஸ்தான அதிகாரிகள் தொழுகையில் ஈடுபட்ட டிரைவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக சென்னையில் உள்ள ஒரு குடும்பத்தினரை வாடகை காரில் அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், திருப்பதி மலையில் தொழுகை செய்யத் தடை உள்ளது குறித்து தனக்கு தெரியாது என்றும், அதனால்தான் தொழுகை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்து அவரை அனுப்பி வைத்தனர். மேலும், டிராவல்ஸ் உரிமையாளர்கள் திருப்பதிக்கு கார் ஓட்டி வரும் ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்ப வேண்டும் என்றும், தேவஸ்தான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+