முந்திக்கிட்டாரே சந்திரபாபு நாயுடு.. நிமிர்கிறது ஆந்திராவின் "குப்பம்".. நம்மை சாய்த்த ராஜதந்திரம்
திருப்பதி: ஓசூர் ஏர்போர்ட் விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து செயல்படாவிட்டால், அது வெறும் அறிவிப்போடு நின்றுவிடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. மற்றொருபுறம் சந்திரபாபு நாயுடு கனகச்சிதமாக பிளானை போட்டு, குப்பம் ஏர்போர்ட் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.. என்ன நடந்தது?
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் கட்டுவது என்பது தமிழக அரசின் கனவு திட்டமாக இருந்தது. கடந்த சில வருடங்களாகவே அரசு பல இடங்களை ஆய்வு செய்து, இடம் தேர்வு செய்து, திட்டத்தை முன்னெடுத்தது.

கலைகிறது ஓசூர் திட்டம்
ஆனால் அந்த கனவு திட்டம், கனவாகவே போய் கொண்டிருக்கிறது.. காரணம் ஓசூர், பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்திற்கு சுமார் 75 கி.மீ மட்டுமே அருகில் உள்ளது. மத்திய விமான போக்குவரத்து விதிகளின்படி, 150 கி.மீ குறைவாக புதிய விமான நிலையம் கட்ட முடியாது.
அத்துடன் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவன விமானங்கள் ஓசூர் வானில் சோதனை மற்றும் பயிற்சிக்குப் பயன்படுத்தப்படுவதால், ராணுவ பாதுகாப்பு காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தமிழக அரசு பன்னாட்டு விமான நிலையத்தை கட்ட முடியாமல் தடை ஏற்பட்டுவிட்டது.. இது மக்களுக்கும் பெருத்த ஏமாற்றமாய் போய்விட்டது.
ஆந்திரா குப்பம் ஏர்போர்ட்
இப்படிப்பட்ட சூழலில்தான், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது மாநிலத்தில் குப்பம் பகுதியில் புதிய விமான நிலையம் கட்ட திட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தார்.. கடந்த 2019-ல் குப்பம் ஏர்போர்ட்டுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகளும் கிடுகிடுவென துவங்கின,
ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக அந்த பணியும் நிறுத்தப்பட்டுவிட்டது.. பிறகு 2024 சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராக வரும்போது, அவர் இந்த திட்டத்தை மீண்டும் முன்னெடுத்து பணிகளை விறுவிறுப்பாக்கினார்.. இப்போது 1,250 ஏக்கர் நிலத்தில் முதல் கட்ட பணிகள் நடந்து வருகின்றன, அடுத்த வருடம் அதாவது 2027-ல் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பலே சந்திரபாபு நாயுடு
நாயுடு முன்னெடுத்துள்ள இந்த குப்பம் திட்டம், எதிர்காலத்தில் பயணிகள் வசதிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் இந்த ஏர்போர்ட் முக்கிய பங்கினை வகிக்கக்கூடும்.. குப்பம் விமான நிலையம் கட்டப்படுவதால் மக்கள் நேரத்தை சேமிக்க முடியும். சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த ஃபிளைட் எளிதாக இருக்கும்..
கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்கள், நகரங்களில் வசிக்கும் மக்கள் பயணத்தை விரைவாகச் செய்ய முடியும். இதன் மூலம் சுற்றுலா வளர்ச்சி அதிகரிக்கும், ஹோட்டல்கள், கடைகள் போன்ற வேலை வாய்ப்புகள் உருவாகும், மேலும் தொழில் முதலீடு அதிகரிக்கும். மாநில அரசுகளுக்கும் நகராட்சிகளுக்கும் வருவாய் நன்றாகவே உயரும்..
ஆனால் இதை வெறுமனே ஆந்திராவின் ஒரு திட்டமாக பார்க்க முடியாது.. இது தமிழக-ஆந்திரா அரசியல் பின்னணியையும் வெளிப்படுத்துகிறது.
குப்பம் சாதகமான பிளஸ் பாயிண்ட்கள்
ஓசூர் விமான நிலையம் தாமதமடைந்தது என்பது தமிழக அரசின் முயற்சிக்கு சிக்கலாக அமைந்துவிட்டது.. தமிழக அரசு ஓசூர் விமான நிலையத்திற்காக இடம் தேர்வு செய்வதிலும் மத்திய அரசிடம் அனுமதி பெறுவதிலும் காலதாமதம் செய்யப்படுவதால், தமிழக மக்களும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர்..
அதுமட்டுமல்ல, குப்பத்தில் விமான நிலையம் அமைந்தால் ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத் தொழில் நிறுவனங்கள் குப்பம் விமான நிலையத்தையே அதிகம் பயன்படுத்தும் சூழல் உருவாகும். இது ஓசூரின் முக்கியத்துவத்தை வெகுவாக குறைத்து, தொழில்துறையினரை ஆந்திரா பக்கம் ஈர்க்கும் ஒரு தந்திரமாகவே பார்க்கப்படுகிறது.
இங்கு இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.. குப்பத்தில் அமையும் ஏர்போர்ட் பெங்களூரு மற்றும் சென்னைக்கு இடையிலான ஒரு முக்கிய இணைப்புப் புள்ளியாக மாறும் என்றாலும், இதன் மூலம் தமிழகத்திற்கு வரவேண்டிய பெரும் முதலீடுகளையும் வேலைவாய்ப்புகளையும் ஆந்திரா அபகரிக்கும் வாய்ப்பும் உள்ளது..
ஓசூருக்கு எப்போது அனுமதி கிடைக்கும்?
ஆக மொத்தம் நாம் போட்ட திட்டங்கள் அனைத்துமே தடையாகி கிடக்கிறது.. நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால், ஓசூரில் இருந்து பெங்களூர் சென்று, அங்கிருந்து பிற பகுதிகளுக்கு போக வேண்டி உள்ளது.. ஆனால் பெங்களூருக்கு போகவே 3 மணி நேரமாகிவிடுகிறது.. அதனால்தான் ஓசூருக்கும் ஒரு ஏர்போர்ட் தேவை என்ற கோரிக்கை எழுந்தபடி உள்ளது..
ஓசூரை பொறுத்தவரை பிரதமர் செல்லும் பெரிய விமானங்கள் கூட பழுது பார்க்கும் பணிக்காக வருகின்றன. ராணுவ விமான சோதனைகளம் நடக்கின்றன.. அப்படியிருக்கும்போது ஓசூருக்கு ஏர்போர்ட் மறுப்பது ஏன்? என தெரியவில்லை...!!!!
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications