தண்டவாளத்தில் சிலிண்டர்.. வேகமாக வந்து மோதிய ரயில்... யூடியூப்பில் பணம் சம்பாதிக்க விபரீத செயல்
Recommended Video
திருப்பதி: யூடியூப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைதளங்களில் மக்களை கவர்ந்து பணம் சம்பாதிக்க திரில்லா விஷயங்களை போடுகிறார். அப்படித்தான் ஆந்திராவில் தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மோதியதை வீடியோ எடுத்து வாலிபர் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவின் ஏர்பேடு அடுத்த சென்னூறு கிராமத்தை சேர்ந்த ராமிரெட்டி. இவர் ஹைதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் தனது யூடியூப் சேனலில் 'திரில்' வீடியோக்களை வெளியிட்டு பணம் சம்பாதிக்க விபரீத வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில்.ஆந்திராவில் சமீபகாலமாக ரயில் தண்டவாளம் முன்பு காஸ் சிலிண்டர், பட்டாசு, பைக், சைக்கிள் போன்றவற்றை வைத்து அதன் மீது ரயில் மோதுவதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். பின்னர் அந்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளத்தில் வைராகி வந்துள்ளது. இந்த காரியத்தை செய்து வந்தது ராமிரெட்டி தான் என்பதை அறிந்த ரயில்வே போலீசார் அவரை கைது செய்தனர்.
ராமி ரெட்டி கடந்த ஜூன் 14ம் தேதி முதல் ஜூலை 27ம் தேதி வரை 47 வீடியோக்களை யூ டியூப்பில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக ரயில் தண்டவாளத்தில் சைக்கிள் செயின்கள், காஸ் சிலிண்டர், பைக் போன்றவற்றை வைத்துவிட்டு, விபரீதத்தை உணராமல் ரயில் மோதும் காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். யூடியூப்பில் பார்வையாளர்கள் அதிகரித்து பணம் சம்பாதிக்க இந்த செயலை ராமிரெட்டி செய்தததாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்..
இது குறித்து ரேணிகுண்டா ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "ரயில் வேகமாக இடிக்கும்போது சிலிண்டர் வெடித்திருந்தால் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். ஆபத்தை உணராமல் பணம் சம்பாதிக்க இதுபோன்ற தவறான செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. இனி இவ்வாறு யாராவது செய்தால் கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என எச்சரித்தார்கள்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications