ஜனவரி மாதம் திருப்பதி ஏழுமலையானை அருகில் இருந்து தரிசிக்கணுமா? இன்றே அரிய வாய்ப்பு!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள், ஆர்ஜித சேவை, அங்கப்பிரதட்சிணம் உள்ளிட்டவைகளுக்கான டிக்கெட் முன்பதிவு எப்போது என்பதை பார்க்கலாம். அதிலும் ஜனவரி மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இன்று வெளியிடுகிறது.
திருப்பதி ஏழுமலையானை அருகில் நின்று தரிசனம் செய்ய வேண்டுமா? இதற்கு ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் அவசியம். இதை 3 மாதங்களுக்கு முன்பே திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும்.

இந்த சேவையில் பங்கேற்க குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவ்வாறு லக்கி டிப்பில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் ஆர்ஜித சேவையில் கலந்து கொள்ளலாம்.
அந்த வகையில் அடுத்த ஆண்டு 2025, ஜனவரி மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. பிற தரிசன டிக்கெட்டுகளும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைக்கான டிக்கெட் இன்று அக்டோபர் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் 21 ஆம் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம்.
இவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்களின் பெயர்கள் ஆன்லைனில் வெளியிடப்படும். அவர்கள் 23 ஆம் தேதி பகல் 12 மணிக்குள் பணம் செலுத்தினால் போதும். அவர்களுக்கான ஆர்ஜித சேவை உறுதியாகும்.அது போல் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகளும் வெளியாகும். அது போல் மெய் நிகர் சேவை டிக்கெட்டுகள் 22 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் ஆன்லைனில் வெளியாகிறது.
அங்கப்பிரதட்சிண டோக்கன்கள் வரும் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். அது போல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைன் ஒதுக்கீடு 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும். அது போல் முதியவர்கள், மாற்றுத்திறனாள்கள், தீராத நோய் கொண்டவர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைனில் அதே நாளில் மாலை 3 மணிக்கு வெளியாகும்.
எல்லாவற்றை விட முக்கியமாக ஏழுமலையானை தரிசிக்க ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும். அது போல் தரிசன டிக்கெட் புக் செய்வதற்களுக்கான அறைகள் ஒதுக்கீடு மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். செல்போனில் TTD எனும் செயலி மூலமும் புக் செய்யலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications