வேட்டி கட்டி நடந்த ராகுல் காந்தி.. வீடியோ போட்டு கலாய்த்த பாஜக.. டிவிட்டரில் கடும் சண்டை!
திருப்பதி கோவிலுக்கு வேட்டி கட்டி நடந்து சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜக கட்சி கிண்டல் செய்து உள்ளது.
டெல்லி: திருப்பதி கோவிலுக்கு வேட்டி கட்டி நடந்து சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜக கட்சி கிண்டல் செய்து உள்ளது.
இதற்காக டிவிட்டரில் அவரின் வீடியோவை வெளியிட்டு பாஜக கிண்டல் செய்து உள்ளது. லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டது.
அதேபோல் வாய் சண்டையும், இணைய சண்டையும் தேர்தல் வருவதை அடுத்து அதிகமாகிவிட்டது. முக்கியமாக பாஜகவின் இணைய பிரிவு, காங்கிரஸ் தலைவர்களை மாறி மாறி விமர்சித்து வருகிறது.

ஆந்திராவில் ராகுல் காந்தி
ஆந்திர பிரதேசம் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்கு திருப்பதியில் வழிபாடு செய்தார். மேல் திருப்பதிக்கு நடந்தே சென்ற அவர் கோவிலில் வழிபாடு செய்த பின் பிரச்சாரம் செய்ய தொடங்கினார். திருப்பதியில் பிரச்சாரத்தில் பேசிய அவர், பாஜக மீது சரமாரி புகார்களை அடுக்கினார்.

வேட்டி கட்டி சென்றார்
திருப்பதி கோவிலுக்கு சென்ற ராகுல் காந்தி, தென்னிந்திய முறைப்படி வேட்டி கட்டி சென்றார். முதல்முறை வேட்டி கட்டிய அவர், கோவிலுக்குள் நடந்தே சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதைத்தான் தற்போது பாஜக கட்சி கலாய்த்து இருக்கிறது. இது குறித்து பாஜக தனது டிவிட்டரில் பக்கத்தில் டிவிட் செய்துள்ளது.
|
பாஜக டிவிட்
பாஜக தனது டிவிட்டில் ''நடக்க கஷ்டமாக இருக்கிறதா ராகுல் காந்தி? பாரம்பரிய இந்து உடையில் நடக்க உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம், பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் இதை எல்லாம் நீங்கள் செய்திருந்தால் தானே. இது போன்று உடை உடுத்துவது நீங்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே இந்துக்களை மதிப்பீர்கள் என்பதை காட்டுகிறது'' என்று கிண்டலாக குறிப்பிட்டு இருக்கிறது. பாஜகவின் இந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.

பாஜக
பொதுவாக வடஇந்தியர்கள் யார் வேட்டி கட்டினாலும் அவர்களுக்கு நடக்க சிரமமாவே இருக்கும். தென்னிந்திய பாரம்பரிய உடைகள் அவர்களுக்கு பெரும்பாலும் சரியாக அணிய வராது. அதேபோல் பிரதமர் மோடியும் கூட சில வடகிழக்கு உடைகளை உடுத்தி இணையத்தில் கலாய்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கும்பட்சத்தில் பாஜக ராகுல் காந்தியை கலாய்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை! பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி











Click it and Unblock the Notifications