திருப்பதி அன்னதான பிரசாதத்தில் பூரான்! வீடியோவுடன் பக்தர் குற்றச்சாட்டு! தேவஸ்தானம் கொடுத்த விளக்கம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான பிரசாதத்தில் பூரான் கிடந்ததாக பக்தர் ஒருவர் வீடியோ வெளியிட்டு குற்றஞ்சாட்டியுள்ளார். திருப்பதில் லட்டு சர்ச்சையே ஓயாத நிலையில், இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும் திருப்பதி தேவஸ்தானம் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதிலும் இருந்து திருப்பதிக்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகிறார்கள். உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதமும் மிகவும் பெயர் பெற்றதாகும்.

சொல்லப்போனால் திருப்பதி என்றாலே உடனே ஏழுமலையானுக்கு அடுத்தபடியாக பக்தர்களுக்கு நினைவுக்கு வருவது லட்டுதான் என்று சொல்லும் அளவுக்கு பக்தர்கள் இடையே திருப்பதி லட்டுவிற்கு தனி மவுசு உண்டு. இந்த நிலையில் தான் திருப்பதி லட்டுவில் கலக்கப்படும் நெய்யில் கலப்படம் இருந்ததாக எழுந்த புகார் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. ஆந்திர அரசியலிலும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
ஆந்திர மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு தரப்பினரும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவில் 2 சிபிஐ அதிகாரிகள், 2 ஆந்திரப் பிரதேச காவல்துறை அதிகாரிகள், 1 இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய பிரதிநிதி ஆகியோர் இடம் பெற வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் இந்த விசாரணையை சிபிஐ இயக்குநர் கண்காணிப்பார் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி லட்டு சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், அன்னதான கூடத்தில் வழங்கப்பட்ட உணவில் பூரான் கிடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக தெலுங்கானா மாநிலம் வாராங்கல் பகுதியை சேர்ந்த சந்து என்பவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். திருப்பதி திருமலை அன்னதான கூடத்தில் பரிமாறிய தயிர் சாதத்தில் பூரான் கிடந்ததாக குற்றம் சாட்டிய சந்து இது தொடர்பாக வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். இது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே திருப்பதி தேவஸ்தானம் இந்த குற்றச்சாட்டை மறுத்து உள்ளது. திருப்பதி தேவஸ்தானம் இது தொடர்பாக கூறுகையில், "திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இத்தகைய குற்றச்சாட்டு ஒரு நாள் கூட வந்தது இல்லை. முழுவதும் வேக வைக்கப்பட்ட உணவில் எந்த சேதமும் இன்றி பூரான் கிடக்க வாய்ப்பே இல்லை. எனவே பூரான் கிடப்பதாக வந்த தகவல் இட்டுக்கட்டப்பட்ட பொய். எனவே பக்தர்கள் இந்த பொய்யான தகவலை நம்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications