பிரபல பாடகி அஞ்சலியிடம் அம்மிக்கல்லுடன் எகிறிய இளைஞர்.. யாரிந்த இன்ஸ்டா பெண்? திகுதிகு திருப்பதி
திருப்பதி: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறி, காதலியின் தாயை கொலை செய்த இளைஞர் தாமாக முன்வந்து முகப்பேர் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம், சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.. அதுபோலவே தெலுங்கானாவிலும் ஒரு கொடூரம் நடந்துள்ளது.. இன்ஸ்டாகிராம் காதலிக்காக கொலைவரை சென்று, இன்று 3 இளைஞர்களும் எதிர்காலத்தை இழந்து நிற்கின்றனர். என்ன நடந்தது தெலுங்கானாவில்?
தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜீடிமெட்லா என்ற பகுதியில் சேர்ந்தவர் அஞ்சலி... தெலுங்கானா கலாச்சார பிரிவில் நாட்டுப்புற பாடகியாக இருந்தவர்.. இதனால், தெலுங்கானாவில் இவர் பிரபலமான பாடகியாகவும் வலம் வந்தவர்..

பாடகி அஞ்சலி
திருமணமான அஞ்சலி, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்துவிட்டார்.. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.. இதில் மூத்த மகளுக்கு 16 வயதாகிறது.. இவர்கள் வசித்து வரும் என்எல்பி நகரிலேயே, ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த சிறுமி எந்நேரமும் இன்ஸ்டாவிலேயே பொழுதை கழித்து வந்துள்ளார்.. அப்போதுதான், பகில்லா சிவா என்ற 19 வயது இளைஞரின் அறிமுகம் இன்ஸ்டாவில் கிடைத்துள்ளது.. நல்கொண்டாவை சேர்ந்த சிவா, DJ பிளேயராக இருக்கிறார்.. ஆரம்பத்தில் நட்புடன் ஆரம்பித்த இந்த பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது.
ஒருகட்டத்தில் மகளின் காதல், அஞ்சலிக்கு தெரியவந்தது. இதனால், மகளை கண்டித்து அறிவுரை சொல்லியிருக்கிறார்..
காதலுக்கு எதிர்ப்பு
இப்படிப்பட்ட சூழலில், 5 நாளைக்கு முன்பு, திடீரென சிறுமி மாயமானார்.. வீட்டை விட்டு கிளம்பும்போது, பீரோவிலிருந்த நகை, பணத்தையும் எடுத்துக்கொண்டு, காதலன் சிவாவுடன் ஊரை விட்டே ஓடினார்.. இதனால் பதறிப்போன அஞ்சலி போலீசுக்கு சென்று மகளை மீட்டுத்தரும்படி புகார் தந்தார்.. போலீசாரும், புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டு, சிறுமியை மீட்டு வந்து அஞ்சலியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
காதலியை தன்னிடமிருந்து பிரித்து அழைத்து சென்றது, சிவாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.. எனவே, நேற்று காலை சிவா, அவரது தம்பி பகில்லா யஷ்வந்த்(19) ஆகியோர் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து, அஞ்சலியை சரமாரியாக தாக்கினார்கள்..
அம்மிக்கல் உரல்
அவரது துப்பட்டாவால் கழுத்தையும் நெரித்தனர்.. அத்துடன், அம்மிக்கல் உரலையும் எடுத்து அஞ்சலி தலையில் போட்டனர்.. இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், அஞ்சலி வீட்டுக்கு விரைந்து வந்து அவரது சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் அனுப்பி வைத்தனர்.. பிறகு, சிறுமி, சிவா, பகில்லா யஷ்வந்த் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்..
கடந்த சில நாட்களுக்கு முன்பு, இதே தெலங்கானா மாநிலத்தில் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்தது.. கரீம்நகர் மாவட்டத்திற்குட்பட்ட சுட்டலபள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர், அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்..
கொடூரம்
ஆனால், பெண்ணின் தாயார் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.. அம்மாவின் எதிர்ப்பு, அட்வைஸுக்கு பிறகு, அந்த பெண்ணும் தன்னுடைய காதலை முறித்துக் கொண்டதாக தெரிகிறது.. இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் நேரில் சென்று காதலியின் அம்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார். இதுகுறித்த புகாரில் ராஜ்குமாரை போலீசார் கைது செய்தது, மிகப்பெரிய அதிர்வலையை அப்போது உண்டுபண்ணியிருந்தது..
இப்போது மீண்டும் ஒரு காதல் சம்பவத்தில், அம்மிக்கல்லை போட்டு, காதலியின் தாயை கொலையே செய்த விவகாரம், இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகப்பெரிய பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications