திருப்பதி திருமலையில் ஆகஸ்ட் 15 முதல் பாஸ்டேக் கட்டாயம்.. வாகன ஓட்டிகள் அறிய வேண்டியவை
திருப்பதி: அலிபிரி சோதனைச் சாவடி மற்றும் திருமலையில் உள்ள சுங்கச்சாவடிகளில், கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பது வழக்கமாக உள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக பாஸ்டேக் மூலம், கட்டணம் தானாகவே வசூலிக்கும் முறை திருப்பதியில் வருகிறது. திருப்பதி திருமலைக்கு வரும் வாகனங்களுக்கு வரும் ஆகஸ்ட் 15 முதல் (சுதந்திர தினம்) பாஸ்டேக் (FASTag) கட்டாயம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தென் இந்தியாவில் உள்ள பிரசித்திப் பெற்ற கோவில்களில் திருப்பதி திருமலை உள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வருகிறார்கள் கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சேஷாசலம் மலையில் தான் திருமலை அமைந்துள்ளது.அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவில் உள்ள திருமலைக்கு பலர் சொந்த வாகனங்களில் தான் வருகிறார்கள். கார்களில், வேன்களில், பேருந்துகளில் அதிகம் பேர் வருகிறார்கள்.

கடும் நெரிசல்
இதனால் திருமலையில் எப்போதுமே வாகன நெரிசல் அதிகமாக இருக்கிறது. திருப்பதி திருமலைக்கு வரும் வாகனங்கள் அலிபிரி சோதனைச் சாவடி வழியாகவே அதிகமாக வருகின்றன. இதன் காரணமாக அங்கு எப்போதுமே நெரிசல் அதிகமாக உள்ளது. இது ஒருபுறம் எனில் அலிபிரி சோதனைச் சாவடி மற்றும் திருமலையில் உள்ள சுங்கச்சாவடிகளில், கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பது வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
பாஸ்டேக் அறிமுகம்
இதையடுத்து நெரிசலை குறைக்கும் விதமாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ளது போல் திருப்பதி திருமலையிலும் பாஸ்டேக் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த புதிய நடைமுறை அலிபிரி சோதனைச் சாவடியில் அமல்படுத்தப்படஉள்ளது. கூட்ட நெரிசலைத் தடுக்கவும், பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான சேவைகளை உறுதிசெய்வதற்காகவும் திருமலை தேவஸ்தானம் இந்த முடிவினை எடுத்துள்ளது.
பாஸ்டேக் கட்டண விவரங்கள் என்ன
முன்பு திருப்பதி மலைப்பாதையில் வாகனங்களுக்கு ரூ.15 முதல் ரூ.100 வரை வாகனங்களை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது பாஸ்டேக் கட்டணங்கள் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகவில்லை, ஆனால் கட்டணங்கள் பழைய விகிதங்களைப் போலவே இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. திருப்பதி செல்வோர் இந்த விவரங்களை அங்கேயே எளிதாக அறிய முடியும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications