திருப்பதி லட்டு விநியோக கவுன்ட்டரில் தீ விபத்து.. கரும்புகை வெளியேறியதால் அலறியடித்து ஓடிய பக்தர்கள்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள லட்டு பிரசாதம் வழங்கும் கவுன்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 47வது கவுண்ட்டரில் தீ விபத்து ஏற்பட்டு, கரும்புகை எழுந்தது. லட்டு விநியோக கவுன்டரில் இருந்து கரும்புகை வெளியானதை கண்டு பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.
ஏழுமலையான் கோவிலில் பிரசாத லட்டு விநியோகம் செய்யும் வளாகத்தில் உள்ள 47 ஆம் நம்பர் கவுன்ட்டரில் யு.பி.எஸ்ஸில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து உடனடியாக வந்த தேவஸ்தான மின்துறை ஊழியர்கள் மின் விநியோகத்தை நிறுத்தி யு.பி.எஸ் இணைப்பை துண்டித்தனர்.

மேலும், திருப்பதி கோவில் பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு, தீயை உடனடியாக அணைத்தனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
லட்டு பிரசாதம் வழங்கும் கவுண்ட்டரில் திடீரென கரும்புகை எழுந்ததால், லட்டு வாங்க வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இந்தச் சம்பவத்தால் திருப்பதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அண்மையில், திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வுக்கான இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டபோது, ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இன்று திருப்பதியில் தீ விபத்து ஏற்பட்டது பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications