வீக் என்ட்டில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த கூட்டம்! டிக்கெட் இருந்தால் மட்டுமே அனுமதி!
திருப்பதி: வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு 10 நாட்களுக்கு கொண்டாடப்படும் நிலையில் நேற்றைய தினம் திருப்பதி ஏழுமலையானை எத்தனை பேர் தரிசித்தார்கள் என்பது தெரியுமா? மேலும் உண்டியல் காணிக்கையையும் தெரிந்து கொள்ளுங்கள்.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். எந்த நேரத்திலும் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருவதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

பெருமாள் கோயில்களில் முக்கியமானது மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியானது நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த விழா திருப்பதியில் 10 ஆம் தேதி முதல் 19 ஆம் வரை நடைபெறும்.
இந்த 10 நாட்களும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் கடந்த டிசம்பர் மாதமே ரிலீஸ் செய்யப்பட்டு புக் செய்யப்பட்டுவிட்டது. இலவச தரிசனத்திற்கான டோக்கன்களை வழங்க திருப்பதியில் 8 இடங்களை தேவஸ்தானம் தேர்வு செய்து அங்கு பக்தர்கள் வரிசையில் நின்று பெற்றுக் கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
9ஆம் தேதி காலை 5 மணிக்கு டோக்கன்கள் வழங்கப்படும் என சொல்லப்பட்டதால் 8ஆம் தேதி இரவே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அப்போது போலீஸார் அவர்களை அதிகாலையில் வருமாறு அறிவுறுத்தியும் அவர்கள் அங்கேயே காத்திருந்தனர்.
அப்போது ஏதோ ஒரு கேட் திறக்கப்பட்டதும், காத்திருந்த பக்தர்கள் முந்தியடித்துக் கொண்டு வந்ததில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 6 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே திருப்பதியில் கூட்டம் குறைந்துவிட்டது.
ஜனவரி 12-ஆம் தேதியான நேற்று மொத்தம் 70,966 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 15,681 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ 2.95 கோடியாகும். சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க எத்தனை மணி நேரம் ஆனது என்பது குறித்து குறிப்பிடவில்லை.
ரூ 300 சிறப்பு தரிசனத்திற்கு 3-4 மணி நேரத்திற்கு மேல் ஆனது. நடைபாதையாக வந்த பக்தர்கள் 8-10 மணி நேரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர். மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசன ஷெட்யூலில் அவர்கள் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை காத்திருந்தனர்.
திருப்பதிக்கு மாதந்தோறும் 24 ஆம் தேதி (இந்த தேதி மாறுதலுக்குள்பட்டது, இதற்கான அறிவிப்பு மாதந்தோறும் 21 ஆம் தேதி வரும்), அதாவது 3 மாதங்களுக்கு முன்பே ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் புக்கிங் தொடங்குகின்றன. அதில் ஒரு அக்கவுன்ட்டில் 6 டிக்கெட்டுகள் வரை புக்கிங் செய்யலாம். அது போல் எக்ஸ்ட்ரா லட்டு வேண்டுமானாலும் தனியே பணம் செலுத்திக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக கொண்டு டிக்கெட் புக் செய்ய வேண்டும். அறைகளை புக் செய்ய அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு புக்கிங் ஸ்லாட் திறக்கப்படும். அதில் புக் செய்துக் கொள்ளலாம். ரூ 300 தரிசனத்திற்கும் அறை புக்கிங்கிற்கும் ஹை ஸ்பீடு இன்டர்நெட் இருந்தால்தான் புக் செய்ய முடியும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications