Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதிக்குள் வர விடமாட்டோம்.. சந்தானம் படத்தின் பாடலை நீக்கி ஆகணும்.. ஜனசேனா கட்சியினர் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவர உள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில், கோவிந்தா கோவிந்தா என்று வரும் பாடலை நிறுத்திவிடுங்கள் என்றும், அந்த பாட்டோடு படம் வெளியிடப்பட்டால் தமிழகத்தில் இருந்து திருப்பதிக்குள் வரும் பக்தர்களை தடுத்து நிறுத்துவோம் என்று ஜனசேனா கட்சியினர் தெரிவித்துள்ளனர். கோவிந்தா நாமத்தை அவமதிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளதாக ஜனசேனா கட்சி புகார் தெரிவித்துள்ளது.

ஜனசேனா கட்சியின் திருப்பதி நிர்வாகி கிரண் ராயர் என்பவர், டிடி நெக்ஸ்ட் லெவல் படக்குழு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருமலையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எதும் எடுக்காவிடில் திருப்பதிக்கு வரும் தமிழக பக்தர்களை தடுத்து நிறுத்துவோம் என்று எச்சரித்துள்ளார்.

if-santhanams-song-is-not-removed-we-will-not-let-him-come-to-tirupati-janasena-party-members-ar

திருப்பதிக்குள் வர முடியாது

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- டிடி நெக்ஸ்ட் லெவல் இன்னும் ஒரிரு நாளில் ரிலீஸ் ஆக போகிறது. அந்த படத்தினை ஆந்திராவில் இருந்து நாங்கள் எதிர்க்கின்றோம். ஏன் என்றால் நீங்க பணத்திற்காக எங்க கடவுளை வைத்து படம் எடுப்பது நல்லா இல்லை. அங்கு இருக்கிற எம் எல் ஏ, அமைச்சர்கள் எதாவது பேசுங்க. எதாவது செய்து அந்த படத்தில் கோவிந்தா கோவிந்தா பாடல் இருக்கக் கூடாது. அந்த படத்தை தடை செய்யுங்க. எதாவது செய்யுங்கள்.

அந்த பாட்டோடு படம் ரீலீஸ் ஆகியது என்றால், நீங்கள் யாரும் திருப்பதி கோவிலுக்கு உள்ளே வர முடியாது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக திருப்பதி வந்திருந்த தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியிடம் இந்த பாடலை மடிக்கணினியில் போட்டு காண்பித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தனர்.

டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம்

நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் டிடி ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் (டிடி நெக்ஸ்ட் லெவல்) படத்தில் சந்தானம் நடித்து முடித்துள்ளார். நாளை மறுநாள் படம் ரிலீஸ் ஆகிறது. ஆர்யா தயாரிப்பில், எஸ். பிரேம் ஆனந்த் எழுதி இயக்கிய இந்த படத்தில், சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரூ. 100 கோடி கேட்டு நோட்டீஸ்

இந்த படத்தில் கோவிந்தா கோவிந்தா என்று வெளியாகி உள்ள பாடல் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக திருப்பதி ஏழுமலையானை கிண்டல் செய்யும் விதமாக உள்ளதாக விமர்சனம் எழுந்தது. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் கோவிந்த கோவிந்தா பாடலை வெளியிடக்கூடாது, நீக்க வேண்டும் என்றும், ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டும் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சந்தானம் விளக்கம்

மேலும் 15 நாட்களுக்குள் இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனவும் கூறப்பட்டு இருந்தது. எனினும் இந்த விமர்சனங்கள் குறித்து பதில் அளித்த நடிகர் சந்தானம், "நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன். நாங்கள் அப்படி கிண்டல் செய்யவில்லை. கடவுள் பாட்டு ஒன்று வைக்க வேண்டும் என்ற ஆசையினாலேயே இந்த பாடலை வைத்தோம். அதனை கிண்டல் செய்யவில்லை. பெருமாளை எனக்கு பிடிக்கும்" என்று கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+