விண்வெளியில் இஸ்ரோ படைக்கும் புதிய சாதனை.. இன்று ஸ்பேடெக்ஸ் விண்கலன்களை ஒருங்கிணைக்க திட்டம்!
ஸ்ரீஹரிகோட்டா: விண்வெளியில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளைத் தொடர்ச்சியாகப் படைத்து வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் இரு விண்கலன்களை விண்வெளியில் ஒருங்கிணைக்கும் பரிசோதனையை இஸ்ரோ மேற்கொள்கிறது. முதல் முயற்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிலையில், சில காரணங்களால் அது தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே விண்கலன்களை ஒருங்கிணைப்பு பணி இன்று (ஜனவரி 10) நடக்கவுள்ளது.
சர்வதேச அளவில் இப்போது முன்னணி விண்வெளி நிறுவனங்களில் ஒன்றாக இஸ்ரோ இருக்கிறது. இஸ்ரோ சார்பில் விண்வெளியில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக உலகின் பல வளர்ந்த நாடுகள் கூட தங்கள் விண்கலனைகளை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோவிடமே வருகிறது. இஸ்ரோவும் கூட ஆண்டுக்குப் பல நூறு விண்கலன்களை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி வருகிறது
இஸ்ரோ அமைக்கும் ஆய்வகம்:
அடுத்த கட்டமாக இஸ்ரோ நிறுவனம் விண்வெளியில் ஒரு ஆய்வு நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. அதாவது ஸ்பேஸில் எப்படி சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் இருக்கிறதோ அதேபோல பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் என்ற பெயரில் விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. வரும் 2035ம் ஆண்டுக்குள் இந்த விண்வெளி ஆய்வகத்தை நிறுவ இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
அதற்கான சோதனை மற்றும் முன்னேற்பாடுகள் இஸ்ரோ இப்போது மேற்கொண்டு வருகிறது. முன்னோட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) என்ற திட்டத்தை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அதாவது இரு விண்கலன்களை விண்வெளியில் வைத்து ஒருங்கிணைக்கும் பரிசோதனை முயற்சியே இதுவாகும்.
இரு விண்கலன்கள்:
இதற்காகவே ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய இரு விண்கலன்கள் வடிவமைக்கப்பட்டு இருந்த நிலையில், அவை கடந்த டிசம்பர் மாதம் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன. இப்போது இந்த இரு விண்கலன்களும் ஒரே சுற்றுவட்டபாதையில் குறிப்பிட்ட தொலைவில் ஒன்றன்பின் ஒன்றாகச் சுற்றி வந்து கொண்டு இருக்கிறது.
இதன் தூரத்தை 225 மீட்டராக குறைக்க முதலில் நேற்று முன்தினம் புதன்கிழமை இஸ்ரோ முயன்றது. இருப்பினும், புறச்சூழல்கள் காரணமாக விண்கலன்களின் இயக்க வேகம் எதிர்பார்த்ததை காட்டிலும் குறைந்துவிட்டது.. இதையடுத்து விண்கலன்களை ஒருங்கிணைக்கும் நிகழ்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும் அதேநேரம் விண்கலன்கள் இப்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டது.
இஸ்ரோ அறிவிப்பு:
இந்தச் சூழலில் தான் ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களின் ஒருங்கிணைப்பு செயல்பாடுகள் இன்று (ஜனவரி10) மீண்டும் நடக்க உள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில், "இரு விண்கலன்களையும் நெருக்கமாகக் கொண்டு செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை இந்த ஒருங்கிணைப்பு பணிகளின் ஆரம்ப நிலையை எட்டக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இரு விண்கலன்களின் ஒருங்கிணைப்பு பணிகள் இன்று முடியும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. ஒருங்கிணைப்பு பணிகள் வெற்றிகரமாக முடிந்தால் அது இஸ்ரோ அமைப்பின் மிகப் பெரிய சாதனையாக இருக்கும் என்பதால் இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது வெற்றிகரமாக முடிந்தால் தான் விண்வெளி ஆய்வகத்திற்கான அடுத்தகட்ட பணிகளை இஸ்ரோ தொடங்கும்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications