கொலைக்கும் அஞ்சாத 'ஜட்டி கும்பல்'.. தனி வீடுகள்.. காலிங் பெல் அடித்தால்.. திருப்பதி போலீஸ் வார்னிங்
திருப்பதி: கொலைக்கும் அஞ்சாத ஜட்டி கேங் கும்பல் இதுவரை வட மாநிலங்களை மட்டுமே அச்சுறுத்தி வந்தது. அந்த கும்பல் திருப்பதி பகுதியில் சுற்றி வருவதால் தனியாக உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருப்பதி போலீஸார் எச்சரித்துள்ளார்கள்.
திருப்பதியில் திருடும் நோக்க்கில் சுற்றி வரம் கொடூர கொள்ளை கும்பலான ஜட்டி கேங் குறித்த சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

திருப்பதியில் சமீபத்தில் கார் ஷோரூம் ஒன்றில் மர்ம கும்பல் கொள்ளையடிக்க முயன்றுள்ளது. ஆனால் அங்கு பணம் இல்லாததால் கொள்ளையடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. காலையில் கார் ஷோரூமை திறப்பதற்காக ஊழியர்கள் சென்றபோது பின்பக்க வழியாக மர்ம நபர்கள் வந்து சென்றிருப்பது உறுதியானது.
இதேபோல திருப்பதியை அடுத்த செர்லோபள்ளி அருகே மர்ம கும்பல் கொள்ளையடிக்க முயன்றுள்ளது. இந்த இரு இடங்களில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த திருப்பதி போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த இரண்டு சம்பவங்களிலும் திருடியது வட மாநிலங்களை திணறடித்த 'ஜட்டி கும்பல்' என்பது அந்த சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஜட்டி கொள்ளையர்கள் இரண்டு பேர் இரவு நேரத்தில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் அங்கு வந்து சென்றதும் உறுதியானது.
இதையடுத்து திருப்பதியில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக புறநகர் பகுதியில் தனியாக உள்ள வீடுகளில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் திருப்பதி போலீசார் தெரிவித்துள்ளனர். தீரன் அதிகாரம் பட பாணியில் ஜட்டி கேங் கொள்ளை கும்பல் தனியாக உள்ள வீடுகளை குறி வைத்து கொள்ளையடிப்பார்கள் என்பதால் திருப்பதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பதி போலீஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ளள வேண்டுகோளில்,"திருப்பதியில் ஜட்டி கேங் என்ற கொடூர கொள்ளை கும்பல், ஆட்கள் குறைந்த பகுதியில் கொள்ளை அடித்து வருகிறது. எனவே இரவு நேரத்தில் வீட்டின் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டால் உடனடியாக வெளியே சென்று பார்க்க வேண்டாம். வினோத சத்தம் கேட்டாலோ அல்லது தண்ணீர் வெளியேறுவது போன்ற சத்தம் கேட்டாலோ பொதுமக்கள் யாரும் வெளியே சென்று பார்க்க வேண்டாம்.
திருப்பதியில் கொலைக்கும் அஞ்சாத கொடூர கொள்ளை கும்பலான ஜட்டி கேங்! போலீசார் வெளியிட்ட சிசிடிவி வீடியோ pic.twitter.com/rIrw2qLDda
— velmurugan (@velmurugantheni) November 13, 2023
இந்த கொள்ளை கும்பல் மக்களிடம் எளிதில் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக ஜட்டி மட்டுமே அணிந்து கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபடுவார்கள், கையில் கூர்மையான ஆயுதங்கள் வைத்து மிரட்டலில் இறங்குவதால் இவர்கள் கொலை கூட செய்ய அஞ்சமாட்டார்கள். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஜட்டி கொள்ளை கும்பல் மிககுறைவான மக்கள் வசிக்கும் பகுதியில் திருடுவதால் , அத்தகைய பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்துடன் வெளியூர் செல்லும் போது பொதுமக்கள் காவல் துறையிடம் தகவல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும்" இவ்வாறு திருப்பதி போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications