Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி லட்டு சாப்பிட்ட என் அம்மாவுக்கு.. ஒரே கதை.. வரிக்கு வரி வார்த்தை மாறாமல்... புதிய சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: 'திருப்பதி லட்டு சாப்பிட்ட பின் என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது' என ஒரே கதையை வரிக்கு வரி வார்த்தை மாறாமல் பலரும் ஒரே நேரத்தில் பதிவிட்டு வருவது திருப்பதி லட்டு விவகாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இந்த விவகாரம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்தில் திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைத்த குற்றச்சாட்டு தேசிய அளவில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஆனால் இந்த விஷயத்தை ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

tirupati temple

ஆந்திராவில் இந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தது முதல், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, முன்பு ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. அந்த வகையில் தான் திருப்பதி எழுமலையான் கோவில் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தள்ளது.

சந்திரபாபு நாயுடு : முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில், திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்தார். நேற்று முன்தினம் அமராவதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, "ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய அரசின் கீழ் திருப்பதி ஏழுமலையான் கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வந்தது.

கடந்த 5 ஆண்டுகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திருமலையின் புனிதத்தை கெடுத்துவிட்டார்கள். அன்னதானத்தின் தரத்தில் சமரசம் செய்தும், புனிதமான திருமலை லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியும் மாசுபடுத்தி உள்ளார்கள். இருப்பினும், நாங்கள் இப்போது தூய நெய்யை பயன்படுத்துகிறோம். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தைப் பாதுகாக்க நாங்கள் பாடுபடுகிறோம்" என்று கூறினார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்: ஆனால், சந்திரபாபு நாயுடுவின் இந்த குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்தது. இதுபற்றி அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சுப்பா ரெட்டி இதுப்பற்றி கூறும் போது, "சந்திரபாபு நாயுடு திருமலையின் புனிதத்தையும், கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையையும் கடுமையாகச் சேதப்படுத்தி உள்ளார் . திருமலை பிரசாதம் குறித்த மிகவும் தவறான கருததை கூயுள்ளார். திருப்பதி பற்றி இப்படி ஒரு வார்த்தைகளை பேசவோ, குற்றச்சாட்டுகளை கூறவோ முன்வர மாட்டார்கள். அரசியல் ஆதாயத்துக்காக சந்திரபாபு நாயுடு எந்த எல்லைக்கும் செல்வார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது" என்றார்.

ஜெகன் மோகன் ரெட்டி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், "திருப்பதி பெருமாள் கோயில் லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு இருந்ததாக வெளியாகி உள்ள அறிக்கை முற்றிலும் தவறானது. மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மக்களின் நம்பிக்கையை அரசியலுக்காகப் பயன்படுத்துகிறார்" என்று தெரிவித்தார்.

விசுவ இந்து பரிஷத் : இதுபற்றி கருத்து தெரிவித்த விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தேசிய செய்தி தொடர்பாளர் பன்சால் கூறுகையில், "ஆந்திராவில் முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசின் இந்து விரோத செயல்கள் பற்றி அனைவருக்கும் தெரியும், ஆனால் அது இந்த அளவிற்கு மோசமாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இது மிகவும் தீவிரமான பிரச்சினை. திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியவர்களைத் தண்டிக்க வேண்டும். குற்றவாளிகள் மீது விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை வேண்டும்" என்று தெரிவித்தார்.

ஒரே மாதிரி திருப்பதி லட்டு பதிவு: இதனிடையே திருப்பதி லட்டு குறித்து தற்போது ஒரே மாதிரியான பதிவு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. 'திருப்பதி லட்டு சாப்பிட்ட பின் என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது' என ஒரே கதையை வரிக்கு வரி வார்த்தை மாறாமல் பலரும் ஒரே நேரத்தில் பதிவிட்டு வருவது திருப்பதி லட்டு விவகாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வேண்டுமென்றே அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இப்படி பதிவிடப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

பவன் கல்யாண்: இதுஒருபுறம் எனில், ஆந்திர துணை முதல்வர் பவன் கலயாண் வெளியிட்ட பதிவில், "இனி நாடு முழுவதும் உள்ள கோவில்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க அதற்காக தனியே கமிட்டி ஒன்று அமைக்க வேண்டும். அதாவது "சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்" என்ற ஒன்றை உடனடியாக துவங்க வேண்டும். சனாதன தர்மத்தை இழிவு படுத்தும் வகையில் நடக்கும் இந்த விஷயங்களை முடிவு கட்ட நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்" என்று கூடிறியிருந்தார்.

tirupati temple

பிரகாஷ் ராஜ் பதில்: இதற்கு பதில் அளித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், மாண்புமிகு துணை முதல்வர் பவன் கல்யாண் அவர்களே.. இந்த விஷயம் உங்களுடைய ஆட்சி காலத்தில் தான் நடந்திருக்கிறது. ஏற்கனவே நாட்டுக்குள் பல சிக்கல்கள் இருக்கும் நிலையில் நீங்கள் புதிய பிரச்சினைகளை இங்கு கொண்டு வராதீர்கள். முதலில் இந்த செயலை செய்தது யார் என்பதை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் பணியில் உங்கள் சிந்தனை இருக்கட்டும்" என்று பதில் அளித்துள்ளார்.

சீமான் கருத்து: திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "திருப்பதி லட்டு சாப்பிட்டவர்கள் எல்லாம் உயிரோடு தான் இருக்கிறார்கள். அதில் எந்த பிரச்னையும் இல்லை தானே? சரி இனிமேல் அப்படி லட்டு தயாரிக்காதீர்கள் என்று கூறிவிட்டு, யாருக்கு ஒப்பந்தம் கொடுத்தார்களோ அவர்களை நீக்கிவிட்டு அடுத்தக் கட்ட நடவடிக்கையை அரசு செய்ய வேண்டும். ஆனால் அதைவிட்டு விட்டு நாட்டிலேயே இதனை மிகப்பெரிய பிரச்னையாகக் கொண்டு செல்வது சரியில்லை.

கோயில், லட்டு, பூந்தி, ஜிலேப்பியை விட்டு வெளியே வர மாட்றாங்க. நாட்டு மக்களின் பிரச்னை ஒரு கோடி உள்ளது. ஆட்சியில் இருக்கிறவர்கள் உருவாக்கப்பட்ட பிரச்னையே நிறைய இருக்கிறது. அதைப் பற்றி பேசவே இல்லை. இப்போது லட்டைப் பிடித்துக்கொண்டு கிளம்பி விட்டார்கள். அப்படி செய்திருக்கக்கூடாதுதான். அது தவறு. யார் அந்த தவறைச் செய்திருக்கிறார்களோ அவர்களிடம்தான் விசாரிக்க வேண்டும்." இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+