திருப்பதி தேவஸ்தான சேவை.. பக்தர்கள் கருத்து தெரிவிக்க கொண்டு வரப்பட்ட சூப்பர் திட்டம்
திருப்பதி: திருப்பதி தேவஸ்தானத்தின் சேவைகள் குறித்து பக்தர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கும் வகையில், திருப்பதியில் பல்வேறு இடங்களில் கியூஆர் கோடு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த கியூ ஆர் கோடினை ஸ்கேன் செய்து பக்தர்கள் டெக்ஸ்டாகவோ, வீடியோவாகவோ தங்களுடைய கருத்தை தெரிவிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதிக்குச் சென்றால் வாழ்க்கையில் கண்டிப்பாக நல்ல ஒரு திருப்பம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். சிறப்பு நாட்கள், பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருவது வழக்கம். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், வெளிநாட்டினர் என எந்த நேரத்திலும் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருவதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள், நாணயங்கள் என கோடிக் கணக்கில் பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு சேவைகள் பக்தர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானத்தின் சேவைகள் குறித்து பக்தர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கும் வகையில், திருப்பதியில் பல்வேறு இடங்களில் கியூஆர் கோடு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த கியூ ஆர் கோடினை ஸ்கேன் செய்து பக்தர்கள் டெக்ஸ்டாகவோ, வீடியோவாகவோ தங்களுடைய கருத்தை தெரிவிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: திருமலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்க தேவஸ்தானம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தேவஸ்தானத்தின் சேவைகள் குறித்து பக்தர்கள் கருத்துகளைத் தெரிவிக்கும் வகையில் தேவஸ்தானம் கியூஆர் கோடினை அறிமுகம் செய்து, அதை ஸ்டிக்கராக உருவாக்கி திருமலை, திருப்பதியில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு ஏதேனும் குறைகள் தென்பட்டால் செல்போன் மூலமாக கியூஆர் கோடினை ஸ்கேன் செய்து வாட்ஸ்-அப் மூலம் தங்களது கருத்துகளை எளிதாக தெரிவிக்கலாம்.
பக்தர்கள் தங்களின் பெயர், பகுதியை அதில் குறிப்பிட வேண்டும். அன்னப்பிரசாதம், தூய்மை, கல்யாண கட்டா, லட்டு பிரசாதம், லக்கேஜ், தரிசன அனுபவம், தரிசன வரிசை, அறைகள் போன்றவற்றில் உள்ள குறைகளை தெரிவிக்கலாம்.
பக்தர்கள் தங்களின் கருத்தை வெளிப்படுத்த உரை அல்லது வீடியோ வடிவத்தை தேர்வு செய்து அனுப்பலாம். அதில் தேவஸ்தான சேவைகள் தரமானது, சிறப்பானது, சராசரி, மேலும் மேம்பாடு தேவை அல்லது நன்றாக இல்லை, எனக் குறிப்பிடப்பட வேண்டும். பக்தர்கள் தங்கள் கருத்தை அதிகபட்சமாக 600 எழுத்துகளுக்குள் தட்டச்சு செய்யலாம் அல்லது வீடியோவாக பதிவேற்றம் செய்யலாம்.
கருத்தைச் சமர்ப்பித்த உடனேயே, "உங்கள் கருத்து வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டது, உங்கள் மதிப்புமிக்க கருத்துகளுக்கு நன்றி" என உறுதிப்படுத்தும் செய்தியைப் பெறுவீர்கள். திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை கருத்தில் கொண்டு சேவைகளின் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications