Tirupati: ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதிக்கு போறீங்களா? வாரத்தில் 4 நாள்.. ! குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ராமேஸ்வரம்- திருப்பதிக்கு வாரத்திற்கு 3 நாட்கள் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலை வாரத்தில் 4 நாட்களுக்கு இயக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுவரை வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே இயங்கி வந்த இந்த ரயில், பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களால் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Rameswaram to Tirupati Express

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோரின் கோரிக்கையின் அடிப்படையில் இந்திய ரயில்வே வாரியம் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த ரயில் எண்கள் 16779 (திருப்பதி - ராமேஸ்வரம்) மற்றும் 16780 (ராமேஸ்வரம் - திருப்பதி) ஆகும். தற்போது ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்தும், திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் திருப்பதியில் இருந்தும் இயக்கப்படுகிறது. கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்பட்டு வாரம் நான்கு நாட்களாக மாற்றப்பட உள்ளது.

கூடுதல் நாள் எந்த கிழமை என்பது விரைவில் ரயில்வேயால் அறிவிக்கப்படும். இந்த ரயில் சுமார் 808 முதல் 846 கி.மீ. தூரத்தை 17-18 மணி நேரத்தில் கடக்கிறது. மதுரை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, வேலூர் கண்டோன்மெண்ட் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நிற்கிறது.

ராமநாதசுவாமி கோயில் மற்றும் திருப்பதி வெங்கடேஸ்வரர் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு இது பெரும் வசதியாக அமையும்.
தென்னக ரயில்வே வட்டாரங்கள் இந்த மாற்றம் விரைவில் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளன.

பயணிகள் IRCTC இணையதளம் அல்லது ரயில்வே செயலியில் புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை சரிபார்த்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம். திருப்பதி செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

இந்த ரயிலின் பயணிகள் வசதிக்காக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+