நாளை ரத சப்தமி 2025: திருப்பதிக்கு போறீங்களா? 3 நாட்களுக்கு இலவச தரிசன டோக்கன் ரத்து!
திருப்பதி: திருப்பதியில் நாளை ரத சப்தமி உற்சவம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று முதலே விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அதாவது இன்று முதல் 3 நாட்களுக்கு விஐபி தரிசனம் கிடையாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் சப்தமி திதி வந்தாலும் தை மாதம் அமாவாசைக்கு பிறகு 7ஆவது நாள் வரும் வளர்பிறை சப்தமி திதி மிகவும் விசேஷமானதாகும். இதை சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கிறோம்.
அன்றைய தினம் ராஜ கிரகமான சூரியன் தனது 7 குதிரைகள் பூட்டிய தேரை வடதிசை நோக்கி செலுத்தும் நாள் ஆகும். வசந்த காலம் கோடை காலம் என அடுத்தடுத்து கால மாற்றம் இந்த நாளில் இருந்து ஏற்படும். இந்த ரத சப்தமி ஏழேழு ஜென்ம பாவங்களையும் தீர்க்கும் என கூறப்படுகிறது.
பஞ்சாங்கத்தின் படி தை மாதம் சுக்ல பட்சம் சப்தமி திதி பிப்ரவரி 4ம் தேதி காலை 6.37 மணிக்கு தொடங்கி மறுநாள் பிப்ரவரி 5 ஆம் தேதி காலை 04.30 மணிக்கு முடிவடையும். சூரிய உதயத்திற்குப் பிறகு திதி கணக்கிடப்படுகிறது என்பதால் ரத சப்தமி நாளை கொண்டாடப்படுகிறது.
திருப்பதியில் புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தை போல் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி ரத சப்தமி உற்சவம் நடைபெறுகிறது. இதை மினி பிரம்மோற்சவம் என்கிறார்கள்.
இந்த நாளையொட்டி மாட வீதிகளில் மலையப்ப சுவாமி 7 வாகனங்களில் உலா வருகிறார். பிப்ரவரி 4ஆம் தேதி நாளை அதிகாலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்தில் உலா வருகிறார். இதை அடுத்து 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்திலும் 11- 12 மணி வரை கருட வாகனத்திலும் மதியம் 1 முதல் 2 மணி வரை அனுமன் வாகனத்திலும் உற்சவர் மலையப்பர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இதையடுத்து மதியம் 2 மணி முதல் 3 மணி வரை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெறும். இதைத் தொடர்ந்து மாலை 4 மணி முதல் 5 மணி வரை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை 6- 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும் நிறைவாக இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும் மலையப்பர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இந்த ரதசப்தமியையொட்டி பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் ரத சப்தமியையொட்டி விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அது போல் இலவச தரிசன டோக்கன்களும் விநியோகம் செய்யப்படாது என தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications