திருப்பதி தேவஸ்தானத்தில் அதிரடி.. லட்டு போல வருது "லட்டு நியூஸ்".. திருமலை பக்தர்களுக்கு மகிழ்ச்சி
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு சமாச்சாரத்தில், இன்னொரு தகவல் வெளியாகியிருக்கிறது.. இது பக்தர்களை மிகுந்த நம்பிக்கைக்கும், மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கி வருகிறது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் என்று சொன்னதுமே, தேவஸ்தானத்தின் பிரசாதமான லட்டுதான் நம்முடைய கண் முன்னே நிற்கிறது.. தேவஸ்தானத்தின் சார்பில் பிரத்யேகமாக இதற்கனவே அமைக்கப்பட்டுள்ள கவுன்டர்களில், ரூ.10, ரூ.50, ரூ.200 ஆகிய கட்டணம் செலுத்தி பக்தர்கள் லட்டு வாங்கி செல்வது வழக்கம்.

திருப்பதி லட்டு: திருப்பதி லட்டுகளின் ஸ்பெஷாலிட்டியே அதன் மிகப்பெரிய சைஸ்தான்.. ஒரு வாரத்துக்கும் மேல் கெடாமல் இருக்கும் இந்த லட்டுகள், உயர் தரத்துடன் தயாரிக்கப்படுகிறது..
எனினும் 10 நாட்களுக்கு முன்பு, இந்த லட்டுகளின் தரமும் சுவையும் குறைந்துவிட்டதாகவும், தேவஸ்தானத்திலிருந்து வாங்கி வரும் லட்டுகள் சீக்கிரத்திலேயே கெட்டுப்போய்விடுவதாகவும் பக்தர்கள் அதிருப்திகளை தெரிவித்து வந்தனர். அதனால், தேவஸ்தானமும், தரமான நெய்யைக் கொள்முதல் செய்ய 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து, லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யினை, தேசிய அங்கீகார வாரியத்திற்கு ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைத்து, அதன் தரத்தை பரிசோதித்தது.

கலப்படம்: அப்போதுதான், தமிழ்நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் அனுப்பும் நெய்யில் கலப்படம் இருப்பது தெரியவந்துள்ளது.. அதாவது அந்த நிறுவனம் அனுப்பிவைக்கும் நெய்யில், காய்கறிக் கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாம்..
இதனால் அதிர்ச்சியடைந்த தேவஸ்தானம், உடனடியாக அந்த நிறுவனத்துக்கு தடையை விதித்து, அந்த நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்ட நெய்யையும் திருப்பி அனுப்பியது. இந்நிறுவனத்துக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் கிரிமினல் நடவடிக்கையும் மேற்கொள்ள போவதாக தேவஸ்தானம் சொல்லியிருந்த நிலையில், நெய் சப்ளை செய்யும் நிறுவனங்கள் அனைத்தையுமே அழைத்து, தரமான நெய் வழங்க அறிவுறுத்தியது.
வார்னிங்: மற்ற நிறுவனமும் தரம் குறைந்து நெய்யை வழங்குவது தெரிந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும், இந்த கலப்பட சம்பவம் பக்தர்களிடடையே மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திவிட்டதை மறுக்க முடியாது.

இதையடுத்து லட்டு விஷயத்தில் கவனமுடன் செயல்பட்டு வருகிறது தேவஸ்தானம். இந்நிலையில், தேவஸ்தானம் குறித்து மற்றொரு தகவல் வெளியாகியிருக்கிறது.
பக்தர்கள்: ஏழுமலையான் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்வதால், அவர்களின் அடிப்படை வசதிக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, பக்தர்களுக்கு தரமான உணவு, குடிநீர் போன்றவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. இந்த வரிசையில், திருமலையில் உள்ள லட்டு கவுன்டர்களும் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
நேற்றுகூட, லட்டு கவுன்டர்களை கூடுதல் செயல் அதிகாரி ஆய்வு செய்துள்ளார்.. வளாகத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா இந்த ஆய்வினை மேற்கொண்டார். அப்போது கிடங்கில் நிலுவையில் வைக்கப்பட்ட கிடங்கையும் அவர் பார்வையிட்டார். இதில் பிரசாதம் தயார் செய்யும் வகையில் பேஷ்கர், சீனிவாஸ் கவுன்டர்களில் லட்டு வழங்கும் செயல்முறையை விளக்கம் கூடுதல் செயல் அதிகாரிக்கு விளக்கம் அளித்தனர்.
லட்டு சுவை: பிறகு, லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் நிலுவை வைக்கப்பட்டுள்ள கிடங்கையும் ஆய்வு செய்து, லட்டு நிலுவை மற்றும் சுவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
கவுண்டர்களை இப்படியே நேரடியாக வந்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளது, பக்தர்களிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.. அத்துடன், கூடுதல் சுவையுடன் தயாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளதால், இனி அடுத்தடுத்து தயாராகும் லட்டுகள் அதிகப்படியான ருசியுடன் தயாராகும் என்றே தெரிகிறது. இந்த அதிரடிகள், திருமலை பக்தர்களிடையே மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications