லட்டுல கொழுப்பு.. ஆமா, திருப்பதி விஷயத்தில் தமிழக அரசு ஏன் சைலண்ட்டா இருக்கு? கேட்பது யார்னு பாருங்க
சென்னை: திருப்பதி லட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசோ, இந்து சமய அறநிலையத் துறையோ இதுவரை கருத்து தெரிவிக்காததால், தங்களது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கேட்டுக் கொண்டுள்ளார்.
4 நாட்களுக்கு முன்பு, திருப்பதி பெருமாள் கோவிலுக்கு பிரம்மோற்சவ நிகழ்ச்சியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி, இந்து ஆதார் அத்தியா அறக்கட்டளை மற்றும் பாண்டுரங்கநாதர் கமிட்டி சார்பில் சுமார் ரூபாய் 1.5 லட்சம் மதிப்பீட்டின் கொடை அனுப்புங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
லட்டு கலப்படம்: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், "திருப்பதியின் லட்டு கலப்படம் செய்த விவகாரத்தில் கலப்படம் செய்தவர்கள் கொடிய பாதகம் அனுபவிப்பார்கள். கலப்படம் செய்தவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள்.

அவர்கள் லாப நோக்கத்துடன் செய்தார்களா? அல்லது தங்களது மனதை புண்படுத்துவதற்காக செய்தார்களா? இருக்க தெரியவில்லை. அதை யார் செய்திருந்தாலும் தவறு... திருத்திக் கொள்ள வேண்டிய தவறு... தண்டனை நிச்சயம் கிடைக்கும்..
நிறுவனம்: கலப்படம் செய்யப்பட்ட லட்டு என தெரிந்தவுடன் அனைத்து லட்டுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தடை செய்துள்ளனர். புதிதாக செய்யப்படும் லட்டுகளில் தவறுகள் நடக்காது என தேவஸ்தான நிர்வாக அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
ராமஜென்ம பூமி பிராண பதிஷ்டை செய்யும் விழாவில் கூட ஒரு லட்சம் லட்டு விநியோகிக்கப்பட்டது. அப்போதும் கூட கலப்பட செய்தி வந்துள்ளது. திருப்பதி, பழனியில் பிரசாதத்தில் கலப்படம் இருப்பதாக வந்த செய்தி இந்து மக்களிடையே பெரிய பாதிப்பு இருக்காது. கோவில்களில் பெறப்படும் பிரசாதம் விஷமாக இருந்தாலும் அதனை பக்தர்கள் பிரசாதமாக எடுத்துக் கொள்வார்கள்.. லட்டு பிரசாதத்தில் கலப்படம் என்ற விவகாரம் மூலம் லட்டின் பெருமை மகிமை என்றும் குறையாது" என்று அர்ஜுன் சம்பத் கூறியிருந்தார்.
அர்ஜூன் சம்பத்: இந்நிலையில், திண்டுக்கல்லில் மீண்டும் அர்ஜூன் சம்பத் பேட்டி தந்துள்ளார்.. அப்போது செய்தியாளர்களிடம் சொன்னாவது: "பூரண மதுவிலக்கு என்பது எல்லா கட்சிகளின் கொள்கையாக உள்ளது. எல்லா கட்சிகளும் போராட்டங்கள் நடத்தியுள்ளது.
இப்போது, மத்திய அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் என கூறி போராட்டம் நடத்துவது மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தக் கூடிய அரசியல் நாடகம். இந்து மக்கள் கட்சி மதுரை மற்றும் திண்டுக்கல்லில் அக்டோபர் 2-ம் தேதி மது ஒழிப்புக்கான மாநாடு நடத்த உள்ளது. பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக மோகன் ஜி எந்த நடைமுறைகளை பின்பற்றாமல் கைது செய்யப்பட்டுள்ளார்?
திருநீர்: தமிழகத்தில் மத மாற்றம் மிக அதிகமாக நடைபெறுகிறது. லட்டு விவகாரத்தில் தமிழக முதல்வரோ, இந்து சமய அறநிலையத் துறையோ எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை. தமிழகத்தில் சில கோயில்களில் திருநீரில் கலப்படம் உள்ளது. நல்ல குங்குமம் கிடைப்பதில்லை. தீப எண்ணெயில் கலப்படம் உள்ளது. எனவே, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
திருப்பதி லட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசோ, இந்து சமய அறநிலையத் துறையோ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. எனவே தமிழக அரசு தன்னுடைய கருத்தை தெரிவிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.












Click it and Unblock the Notifications