திருப்பதி ஏழுமலையானின் தனி ராஜாங்கம்.. 2024-25 பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா.. என்னென்ன செலவுகள்
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழுவினர் 2024-25 நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். ஏழுமலையான் கோவிலில் நடப்பாண்டு 5141 கோடியே 74 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வீட்டு பட்ஜெட் தெரியும்.. நாட்டில் போடப்படும் பட்ஜெட் தெரியும்.. மாநிலங்கள் தங்கள் மக்களின் வளர்ச்சிக்காக பட்ஜெட் தாக்கல் செய்வது தெரியும். கோவிலில் பல கோடி செலவில் பட்ஜெட் போடப்படுவது எத்தனை பேருக்கு தெரியும். உலகின் பணக்கார கடவுள் ஏழுமலையானுக்கு ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்படுவது போல ஆண்டுதோறும் பட்ஜெட் போடப்படுகிறது.

கலி காலத்திலும் பெருமாள் பக்தா்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் 3 முதல் 4 கோடி ரூபாய் வரை உண்டியல் வருமானமாக கிடைக்கிறது. மேலும் வைர, தங்க, வெள்ளி நகைகளும் காணிக்கையாக கிடைக்கின்றன. பல பக்தர்கள் தங்களின் சொத்துக்களையும் திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்துவிடுகின்றனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருப்பதி மலையில் நேற்று அறங்காவலர் குழுவின் தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் சொத்து மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.
2024-25 நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை அதிகாரிகள் அறங்காவலர் குழு முன் தாக்கல் செய்தனர். 5141 கோடியே 74 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிற்கு அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி கூறியுள்ளார்.
நடப்பு நிதி ஆண்டில் இதுவரை ஏழுமலையானுக்கு பக்தர்கள் 1611 கோடி ரூபாயை காணிக்கையாக சமர்ப்பித்து இருந்த நிலையில் அடுத்த நிதியாண்டிலும் அதே அளவுக்கு காணிக்கை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேவஸ்தானம் வங்கியில் செய்துள்ள நிரந்தர வைப்பு நிதிகள் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 1068 கோடியே 51 லட்ச ரூபாய் வட்டி வருமானம் தேவஸ்தானத்திற்கு கிடைத்துள்ளது. அடுத்த நிதி ஆண்டில் வட்டி வருமானம் 1167 கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் பிரசாத விற்பனை மூலம் 550 கோடி ரூபாய் கிடைத்துள்ள நிலையில் அடுத்த நிதியாண்டில் 600 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும், தரிசன டிக்கெட் விற்பனை மூலம் 328 கோடி ரூபாய் நடப்பு நிதியாண்டில் கிடைத்த நிலையில் அடுத்த ஆண்டும் அதே நிலை தொடரும் என்றும், கட்டண சேவை டிக்கெட்டுகள் விற்பனை மூலம் 140 கோடி ரூபாய் தற்போது கிடைத்துள்ள நிலையில் அடுத்த நிதியாண்டில் 150 கோடி ரூபாய் வரை கிடைக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் ஊதியத்திற்காக நடப்பு நிதியாண்டில் 1664 கோடி செலவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த நிதி ஆண்டில் ஊதியத்திற்காக 1733 கோடி ரூபாய் செலவு செய்யப்படும் என்று அப்போது அவர் கூறினார்.
மேலும் இதுவரை தேவஸ்தான நிர்வாகம் 2 கிராம், 5 கிராம், 10 கிராம் ஆகிய எடைகளில் தங்க டாலர்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் இனிமேல் 5 கிராம், 10 கிராம் ஆகிய எடையில் நான்கு டிசைன்களில் திருமணத்தில் பயன்படுத்தப்படும் தங்க தாலிகளை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கடந்த காலங்களில் கல்யாண மஸ்த்து என்ற பெயரில் தேவஸ்தான நிர்வாகம் 32000 கூட்டு திருமணங்களை நடத்தியது. தேவஸ்தானத்தின் கல்யாண மஸ்த்து திட்டத்தில் திருமணம் செய்து கொண்ட 32,000 தம்பதிகளில் ஒருவர் கூட மதம் மாறவில்லை என்பதை நாங்கள் நடத்திய சர்வே மூலம் தெரிந்து கொண்டிருக்கிறோம்.
தேவஸ்தானத்தின் கல்யாண மஸ்த்து திருமணங்களில் பயன்படுத்துவதற்காக இரண்டு கிராம் எடையுள்ள தங்க தாலியை தேவஸ்தானம் நிர்வாகம் நன்கொடையாக வழங்கியது. ஏழுமலையான், பத்மாவதி தாயார் உருவங்கள் பதிக்கப்பட்ட அந்த தங்கத்தாலிகளின் மகிமை காரணமாக 32,000 தம்பதிகளில் ஒரே ஒரு தம்பதி கூட மதம் மாறவில்லை என்பதை உறுதி செய்து கொண்டிருக்கிறோம்.
எனவே இனிவரும் காலங்களிலும் மதமாற்றத்தை தடுக்கும் வகையில் 5 கிராம், 10 கிராம் ஆகிய எடை கொண்ட தங்க தாலிகளை நான்கிற்கும் மேற்பட்ட டிசைன்களில் தயார் செய்து விற்பனை செய்ய தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. ஏழுமலையான் திருவடிகளில் வைத்து பூஜிக்கப்பட்ட பின் விற்பனை செய்யப்பட இருக்கும் தங்கத்தாலிகளை தேவையான பக்தர்கள் பணம் செலுத்தி வாங்கி கொள்ளலாம் என்றும் கருணாகர ரெட்டி தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications