மே மாசம் திருப்பதி போக ரூ 300 ஸ்பெஷல் டிக்கெட் கிடைக்கலையா? கவலையை விடுங்க! இதோ ஸ்லாட் ஓபனாகிடுச்சே!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் மே மாதம் தரிசனம் செய்ய ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் புக் செய்ய முயன்று கிடைக்கவில்லையா, கவலையை விடுங்கள். புக்கிங் ஓபனாகிவிட்டது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அது போல் பண்டிகை, விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்ய வருகிறார்கள்.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய 90 நாட்களுக்கு முன்பே ரூ 300 தரிசன டிக்கெட்டுகளை பெறுவது அவசியம். ஒவ்வொரு மாதமும் 24 ஆம் தேதி ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளுக்கான முன்பதிவுகள் தொடங்கும். அப்போது 4 லட்சம் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிடும்.
அன்றைய தினம் மதியம் 3 மணிக்கு யாரெல்லாம் தரிசனத்திற்கு புக் செய்தார்களோ அவர்களுக்கு மட்டும் அறை புக்கிங் நடைபெறும். தரிசனத்திற்கு 4 லட்சம் பேர் புக் செய்திருந்தால் 4 லட்சம் அறைகள் எல்லாம் ஒதுக்கீடு இல்லை. இருப்பதே 50 ஆயிரத்தை விட குறைவுதான். எனவே யார் சீக்கிரமாக புக் செய்கிறார்களோ அவர்களுக்கு அறை கிடைக்கும். இது ரூ 50, ரூ 100 வாடகைகளில் உள்ளது. ரூ 1000-க்கும் அறைகள் உள்ளன.
ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் அரை மணி நேரத்திற்குள் விற்றுத் தீர்ந்துவிடும். எனவே விரைந்து புக் செய்ய வேண்டும். ஒரு வேளை புக் செய்ய முடியாவிட்டால் இலவச தரிசனத்தில் செல்லலாம். இல்லாவிட்டால் திவ்ய தரிசனம் என சொல்லப்படும் நடைபாதையில் வந்து தரிசிக்க வேண்டும்.
இவையும் இல்லாவிட்டால் இன்னொரு வழி இருக்கிறது. அதாவது சீனிவாச திவ்ய அனுகிரக விசேஷ ஹோமம் மூலமும் நாம் ஏழுமலையானை தரிசிக்கலாம். இதற்கான டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரிலீஸ் செய்துள்ளது. இந்த ஹோமத்திற்கான டிக்கெட் 1600 ரூபாய் ஆகும். இதில் ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் 2 எண்ணிக்கையில் கிடைத்துவிடும். ஆனால் இந்த டிக்கெட் அடுத்த மாதம், அதாவது மே மாதத்திற்கானது.
அலிபிரியில் நடைபெறும் ஹோமத்தில் கலந்து கொண்டால் மட்டுமே இந்த டிக்கெட் கிடைக்கும். ஒரு ஐடியில் 2 டிக்கெட் மட்டுமே புக் செய்ய முடியும். எனவே பெயர், வயது, ஆதார் அல்லது பாஸ்போர்ட் எண்ணுடன் காத்திருங்கள்.
https://ttdevasthanams.ap.gov.in/ என்ற இணையதளத்தில் போய் லாகின் செய்து அதில் ஸ்ரீதிவ்ய அனுகிரக ஹோமம் என இருக்கும். அதை கிளிக் செய்து குறிப்பிட்ட மே மாதத்தில் உங்களுக்கு வேண்டிய தேதியில் புக் செய்து கொள்ளலாம். ஒரு ஐடியில் இருவருக்கு மட்டுமே புக் செய்ய முடியும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications