அம்மாடியோவ்.. நம்ம வெங்கிக்கு இத்தனை கோடி சொத்தா? திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெள்ளை அறிக்கை
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வைத்துள்ள சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தேவஸ்தானம் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இது போக விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள், பிரம்மோற்சவ நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கை தாண்டும்.
திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு தினந்தோறும் அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், பூஜை வஸ்துகள் எல்லாம் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது.

பணக்கார திருப்பதி
உலகிலேயே பணம் கொழிக்கும் கோயில் திருப்பதி என்பார்கள். அந்த அளவுக்கு ஏழுமலையானின மகிமைக்கு பிராயசித்தமாக கோடிக்கணக்கான பணத்தையும் தங்கத்தையும் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். திருப்பதி ஏழுமலையானுக்கு ஏகப்பட்ட சொத்துகளும் நகைகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது. பெரும் பணக்காரர்கள் தங்களது கடைசி காலங்களில் கவனிக்க யாரும் இல்லாததால் அவர்களுடைய சொத்துகளை ஏழுமலையானுக்கு உயிலாக எழுதி வைத்துவிடுகிறார்கள்.

ஏழுமலையான் சொத்து மதிப்பு
இந்த நிலையில் ஏழுமலையானுக்கு இருக்கும் சொத்து மதிப்புகள் குறித்து தேவஸ்தானம் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. கடந்த 30.6.2019 அன்றைய தேதியின் படி தேவஸ்தானம் பல்வேறு வங்கிகள் மற்றும் இதர அமைப்புகளில் 13 ஆயிரத்து 25 கோடியே 9 லட்சம் ரூபாயை நிரந்தர வைப்பு நிதியாக வைத்துள்ளது.

தங்க முதலீட்டு திட்டம்
வங்கிகளின் தங்க முதலீட்டு திட்டத்தில் 7339 கிலோ 740 கிராம் தங்கம் அன்றைய தேதியில் இருப்பு இருந்தது. மேலும் திருப்பதி தேவஸ்தான் வங்கிகளில் உள்ள பணத்தின் ஒரு பகுதி மத்திய, மாநில அரசுகளின் செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்ய இருப்பதாக சமூகவலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன. இது போன்ற பதிவுகள் மிகவும் தவறானவை, அடிப்படை ஆதாரம் அற்றவை என தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.

முதலீடுகள்
அது போல் தேவஸ்தான அறங்காவலர் குழு முதலீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் தற்போது வங்கிகளில் 15 ஆயிரத்து 938 கோடியே 8 லட்சம் ரூபாய் பணமும் 10 ஆயிரத்து 288 கிலோ 370 கிராம் தங்கமும் இருப்பு உள்ளதாகவும் அந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் திருப்பதி ஏழுமலையானுக்கு மொத்தம் ரூ 2.3 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியின் சொத்து விவரம் முதல் முறையாக 1933 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

960 சொத்துகள்
நாடு முழுவதும் 7,123 ஏக்கர்களில் 960 சொத்துகள் உள்ளன. இதன் இன்றைய மதிப்பு ரூ 85,705 கோடி ஆகும். 2.5 டன் தங்க நகைகள் உள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலும் பழமையான நகைகள். தேவஸ்தான ஊழியர்களுக்கு 300 ஏக்கரில் வீட்டுமனைகள் ரூ 60 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 25 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதலாக 132 ஏக்கர் நிலம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவை விரைவில் தேவஸ்தான ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications