கோவிந்தா ஹரி கோவிந்தா! ஏழுமலையானை தரிசிக்க ரெடியா? திருப்பதி பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது ஆர்ஜித சேவைகள், சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் தங்கும் அறைகள் உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நவம்பர் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட் உள்ளிட்ட டிக்கெட்டுகளை இன்று பக்தர்கள் ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி சென்று ஏழுமலையானை ஆண்டுக்கு ஒருமுறையேனும் தரிசனம் செய்ய வேண்டும் என்று லட்சக்கணக்கான பக்தர்கள் விரும்புகின்றனர். ஆனால் இலவச தரிசனத்தில் மணிக்கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

Tirupati Arjitha Seva

அதே நேரத்தில் விரைவு தரிசனத்திற்காக ஆன்லைனில் டிக்கெட் முன் பதிவு செய்கின்றனர். நான்கு மாதங்களுக்கு முன்பு டிக்கெட் புக்கிங் தொடங்கினாலும் பல பக்தர்களுக்கு கிடைப்பதில்லை. ஆன்லைனில் தரிசன டிக்கெட்கள் விற்பனை தொடங்கிய உடன் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.

அதே போல அனைத்து சேவா டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலமே புக் செய்யப்படுகிறது. சிலருக்கு அதிர்ஷ்ட குலுக்கல் மூலமும் சேவா டிக்கெட் கிடைக்கும். சுப்ரபாத சேவை தொடங்கி சகஸ்ரநாம தீப அலங்கார சேவை வரைக்கும் ஆன்லைன் மூலமே புக் செய்ய முடியும். அதே போல இலவசமாக புக் செய்யும் அங்கபிரதட்சணம், மூத்த குடிமக்கள் தரிசனம் என அனைத்திற்குமே ஆன்லைனில் டிக்கெட் வெளியாகும். இது தவிர தரிசனத்திற்காக பக்தர்கள் தங்கும் அறைகளையும் ஆன்லைன் மூலமே புக் செய்ய முடியும்.

இந்த நிலையில் வரும் நவம்பர் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான சேவை டிக்கெட்டுகள் இன்று திருப்பாலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாக இருக்கிறது. 18ஆம் தேதியான இன்று காலை 10 மணி முதல் 20ஆம் தேதி காலை 10 மணி வரை சுப்ரபாதம், தோமலை சேவை,அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை போன்ற ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

21ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் திருக்கல்யாண உற்சவத்துக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

24ஆம் தேதி காலை 10 மணிக்கு இலவச அங்கப் பிரதட்சன டிக்கெட்டுகளும், 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டும், அதே நாள் மதியம் மூன்று மணிக்கு மாற்றுத்திறனாளி பக்தர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த மாதம் 24 ஆம் தேதி 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் காலை 10 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பக்தர்களை மோசடி செய்யும் வகையில் போலி இணையதளங்கள் உருவாகி இருப்பதோடு புரோக்கர்களும் பக்தர்களை ஏமாற்றி வருகின்றனர். எனவே திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ttdevasthanams.ap.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+