ஜூலை, ஆகஸ்ட்டில் திருப்பதி செல்ல பிளானா? ரூ 300 தரிசன டிக்கெட் இன்று வெளியீடு.. முன்பதிவு செய்யுங்க!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட் இன்று முன் பதிவு செய்ய வெளியிடப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகிறார்கள். இவர்கள் ரூ 300 தரிசனம், இலவச தரிசனம், பல்வேறு சேவைகள் மூலம் ஏழுமலையானை தரிசிக்கிறார்கள்.

இவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் நீண்ட நேரம் தரிசனத்திற்காக காத்திருக்காமல் இருக்க தரிசன டிக்கெட் ஆன்லைனில விற்பனை செய்யப்படுகிறது.
மாதந்தோறும் 24 ஆம் தேதிகளில் ரூ 300 விரைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியாகிறது. அதன்படி கடந்த மாதம் மே, ஜூன் மாதங்களுக்கான ரூ 300 தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. மே மாதத்திற்கான 7 லட்சத்து 75 ஆயிரம் டிக்கெட்டுகளும், ஜூன் மாதத்திற்கு 7 லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகள் என மொத்தம் 15 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் டிக்கெட் முன் பதிவு செய்ய முயன்றதால் ஆன்லைன் சேவை முடங்கியது.

இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் வசதிக்காக பஸ் நிலையம், ரயில் நிலையம், அலிபிரி, கோவிந்தராஜ சாமி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தினமும் 25 ஆயிரம் நேர ஒதுக்கிட்டு இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இதேபோல் ஸ்ரீவாணி அறக்கட்டளை, சுப்ரபாதம், நிஜபாத சேவை, சகஸ்ர தீப அலங்காரம், கல்யாண உற்சவம் உள்ளிட்ட சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான ரூ 300 தரிசன டிக்கெட் இன்று வெளியாகிறது. இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மே மாதம் கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications