Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏழுமலையானை பார்க்க போறீங்களா.. இனி நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை.. திருப்பதி கோவிலில் ஏஐ வசதி!

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி கோவிலில் நீண்ட நேரம் பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்வதை கட்டுப்படுத்த ஏஐ மற்றும் ஐடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வுகளை காண உள்ளதாக தேவஸ்தான குழு தலைவர் பிஆர் நாயுடு தெரிவித்துள்ளார்.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்வேறு நாடுகள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலேயே திருப்பதி கோவிலுக்கு தான் அதிக அளவு காணிக்கை செலுத்தப்பட்டு வருகிறது.

tirupati AI Technology Temple

கடந்த ஆண்டு ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சி அமைந்த பின், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு புதிய அறங்காவலர் குழு அறிவிக்கப்பட்டது. அந்த அறங்காவலர் குழு தலைவராக பிஆர் நாயுடு நியமனம் செய்யப்பட்டார். இந்த குழு செயல்பாட்டுக்கு வந்து 2வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

இந்த நிலையில் பிஆர் நாயுடு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திருப்பதியில் பக்தர்களின் அனுபவத்தை மேம்படுத்த தொழில்நுட்ப சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, நீண்ட வரிசையை கட்டுப்படுத்த ஏஐ மற்றும் தகவல் தொழில்நுட்பம் மூலமாக தீர்வுகளை ஏற்படுத்த உள்ளோம்.

உலகளவில் சனாதன தர்மத்தை பரவலாக்கும் வகையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திருப்பதி யாத்திரையை நிறைவான பயணமாக மாற்ற இருக்கிறோம். ஏற்கனவே முடிவு செய்ததை போல் தலித் மக்கள் மற்றும் மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 5 ஆயிரம் கோயில்களை கட்டவும் திட்டமிட்டுள்ளோம். அதேபோல் பக்தர்களின் வசதிகளுக்காக சைபவ் பாதுகாப்பு ஆய்வகம் அமைக்க உள்ளோம்.

இதற்காக ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் கட்டுமான அறக்கட்டளையில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நித்ய அன்னதானம் அறக்கட்டளை மூலமாக நாடு முழுவதும் 60க்கும் அதிகமான கோவில்களில் அன்னதானம் வழங்க ரூ.2,400 கோடி செலவிடப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார். கடந்த 11 மாதங்களில் மட்டும் திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு ரூ. 918 கோடி உண்டியல் பணம் வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+