Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபிரிட்ஜில் சேமித்த எய்ட்ஸ் ஊசி.. எச்ஐவி ஊசியை காதலனின் மனைவிக்கு போட்ட பெண்.. நம்ப முடியாத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம், மனித மனதின் இருண்ட பக்கத்தை படுமோசமாக வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது... காதல், பிரிவு, பொறாமை, பழிவாங்கும் எண்ணம் இதெல்லாம் ஒன்று சேரும்போது மனிதன் எவ்வளவு தூரம் குரூரமாக, கேவலமாக போக முடியும் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு பயங்கர எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. அப்படி என்ன நடந்தது?

கர்நூலைச் சேர்ந்த கருணாகர் என்பவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக உள்ளார்.. ஸ்கூல் படிக்கும்போது வசுந்தரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.. வசுந்தராவும் கருணாகரை தீவிரமாக காதலித்தார்... இருவரும் பள்ளி படிப்பை முடித்தனர்..

HIV syringe Refrigerator Ex-boyfriend s wife Female attacker

பள்ளி பருவ காதல் - பெண் டாக்டர்

வசந்தரா நர்சிங் படித்து நர்ஸ் ஆக பணியாற்றி வந்தார்... அப்போதும் இருவரும் காதலித்து கொண்டே வந்தனர்... ஆனால் காலப்போக்கில் இந்த காதல் முறிந்தது. இதையடுத்து கருணாகர், வேறு ஒரு பெண் டாக்டரை கல்யாணம் செய்துகொண்டார். அந்த பெண் டாக்டர் இப்போது தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியாக பணியாற்றி வருகிறார்.

தன்னுடைய காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தது வசுந்தராவால் ஏற்கவே முடியவில்லை.. கடும் மனவேதனையில் ஆழ்த்தியது. அந்த வேதனையே, நாளடைவில் பொறாமையாகவும், கோபமாகவும் வசுந்தராவுக்குள் மாறியது. "அவர்களது வாழ்க்கையை நான் சீரழிக்க வேண்டும்" என்ற மோசமான எண்ணம் வசுந்தராவின் மனதில் ஆழமாக பதிந்தது. இந்த நேரத்தில்தான் மிக கொடூரமான திட்டத்தை வசுந்தரா போட்டார்..

மாஸ்டர் பிளான் போட்ட நர்ஸ் காதலி

தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸ் வேலை பார்க்கும் கோங்கே ஜோதி என்ற பெண்ணின் உதவியை வசுந்தரா நாடினார்.. தன்னுடைய பிளானுக்கு உதவி செய்தால் பணம் தருவதாக சொல்லி ஜோதியையும், அவரது மகன்களான பூமா ஜஸ்வந்த் மற்றும் பூமா ஸ்ருதி ஆகியோரையும் சம்மதிக்க வைத்தார்..

கடந்த 9ம் தேதி மதியம், காதலரின் மனைவி அதாவது அந்த பெண் டாக்டர், தன்னுடைய டியூட்டி முடித்து வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். கர்நூல் விநாயக் காட் அருகே கே.சி. கேனல் பகுதியில் வந்தபோது, முன்பே திட்டமிட்டபடி பூமா ஜஸ்வந்த் மற்றும் ஸ்ருதி பைக்கில் வேகமாக வந்து, பெண் டாக்டரின் ஸ்கூட்டர் மீது மோதினார்கள்.. இதில் நிலைதடுமாறி விழுந்த பெண் டாக்டருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது.

ஆட்டோவில் செலுத்தப்பட்ட எச்ஐவி ஊசி

இதை பார்த்து பதறிப்போய், அவருக்கு உதவி செய்வது போல நடித்து வசுந்தரா ஓடி வந்து ஆட்டோ ஒன்றை நிறுத்தினார். மருத்துவமனைக்கு உடனே அழைத்து போகிறேன் என்று சொல்லி, அந்த பெண் டாக்டரை ஆட்டோவில் ஏற்றினார்.

முன்னதாக, எச்ஐவி பாதித்த ரத்தத்தை ஊசி ஒன்றை ஏற்கனவே தயாராக மறைத்து வைத்திருந்தார் வசுந்தரா.. அந்த ஊசியை ஆட்டோவில் வைத்தே பெண் டாக்டரின் கையில் செலுத்தினார். ஆனால் ஆட்டோ போகும்போதே ஊசியை செலுத்தியதால், திடீரென ஏற்பட்ட வலியால் அந்த பெண் டாக்டர் அலறினார். உடனே வசுந்தராவும் ஜோதியும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்..

இந்த சம்பவம் குறித்து பெண் டாக்டர் தன்னுடைய கணவரிடம் விஷயத்தை சொல்லவும், அதைக்கேட்டு பதறிப்போன கணவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், வசுந்தராவின் சதித் திட்டம் முழுவதுமாக வெளிச்சத்துக்கு வந்தது.

ஃபிரிட்ஜில் எய்ட்ஸ் ஊசி

அதாவது அரசு மருத்துவமனையிலிருந்து டெஸ்ட் என்ற பெயரில் எச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை ஜோதி, பெற்றுவந்து, தன்னுடைய வீட்டின் ஃபிரிட்ஜில் சேமித்து வைத்திருந்தாராம்,.. சம்பவத்தன்று அதை எடுத்து சென்று திட்டமிட்டு பெண் டாக்டருக்கு செலுத்தியதும் விசாரணையில் உறுதியானது..

இப்போது வசுந்தரா, ஜோதி மற்றும் அவரது இரண்டு மகன்கள் என நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அந்த பெண் டாக்டர் மருத்துவமனையில் தீவிரமான மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். மருத்துவர்கள், அவருக்கு இதனால் எந்த தொற்றும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

காதல் தோல்வி இவ்வளவு பயங்கரத்தை தந்துவிடுமா தெரியவில்லை.. எந்த மனிதாபிமானமும் இல்லாத இடத்தில் நிஜகாதல் இருக்க வாய்ப்பே இல்லை!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+