நெருங்கி.. உரசி நின்ற பெண்.. சபலம், போதையில் விழுந்த 67 வயசு தாத்தா... பேத்தியை தொலைத்த கொடுமை!
சபலத்தினால் தன்னுடைய பேத்தியை முதியவர் தொலைத்து விட்டார்
திருப்பூர்: 62 வயசு தாத்தாவுக்கு ஒரு பெண்ணை பார்த்ததும் சபலம் தொத்திக் கொண்டது.. பக்கத்தில் அந்த பெண் நெருங்கி.. உரசி பேசியதும்.. ஏற்கனவே போதையில் இருந்த தாத்தா அப்படியே கவிழ்ந்தே விட்டார்! கடைசியில் இரண்டரை வயது பேத்தியை தொலைத்துவிட்டார்!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது... பல்லடம் அடுத்த அரசன்காடு பகுதியில் வசித்து வருபவர் மாரி.. 62 வயசு... இவரது மனைவி 2 வருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.
மகன் சுடலை ராஜாவுடன் வாழ்ந்து வருகிறார்.. மனைவியை விட்டு பிரிந்து வாழ்பவர் சுடலை.. இரண்டரை வயதில் மகாலட்சுமி என்ற மகள் இருக்கிறாள்.. மகன், பேத்தியுடன் மாரி வசித்து வந்துள்ளார். தந்தை, மகன் இருவருமே பெயின்டர்கள்!

அனாதை
இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு வேண்டுதலை நிறைவேற்ற மாரி பழனி முருகன் கோயிலுக்கு சென்றார்.. அப்போது பேத்தியையும் தூக்கி கொண்டு போனார்.. திரும்பி வருவதற்காக மதியம் பேத்தியுடன் பழனி பஸ் ஸ்டேண்டில் நின்று கொண்டிருந்தார்.. அப்போது ஒரு பெண் அங்கு வந்தார்.. 35 வயதிருக்கும்.. வலிய வந்து மாரியிடம் நெருங்கி நின்று பேச்சு தந்தார்.. தான் ஒரு அனாதை என்று பேச்சை ஆரம்பித்து, கடைசியில் வீட்டு வேலைக்கு வரட்டுமா என்று கேட்டார்.

பரிதாபம்
அந்த பெண் மீது பரிதாபத்துடன் சபலமும் வந்துவிட்டது மாரிக்கு.. யார், என்ன என்று கூட கேட்காமல் பஸ்ஸில் ஏற்றி வீட்டுக்கு வந்துவிட்டார்... வீட்டில் மகனும் வெளியூர் போயிருந்ததால் இன்னும் வசதியாக போயிற்று.. கடைக்குபோய் சரக்கு வாங்கி வந்துள்ளார்.. நன்றாக குடித்துவிட்டு அந்த பெண்ணுடன் ஜாலியாக இருந்துள்ளார்.. பிறகு போதையில் அப்படியே தூங்கியும் விட்டார்.

சிசிடிவி கேமிரா
பொழுது விடிந்து பார்த்தால், பேத்தியையும் காணோம், பொண்ணையும் காணோம். எங்கெங்கோ தேடிப்பார்த்து, கடைசியில் வெளியூரில் உள்ள மகனுக்கு தகவல் தந்தார்.. மகனும் போலீசாருக்கு புகார் தர, போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது சம்பந்தப்பட்ட அந்த மர்மப் பெண், குழந்தையை அழைத்து செல்வது தெளிவாக பதிவாகி இருந்தது.

தனிப்படை
இதையடுத்து, அந்த பெண்ணையும், குழந்தையையும் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.அந்த சிசிடிவி காட்சியில் சுடிதார் அணிந்த பெண் முன்னால் நடக்க.. எதுவுமே தெரியாத அந்த 2 வயது குழந்தை பின்னாடியே செல்கிறது.. அந்த பெண்ணிடம் எந்தவித பதட்டம், பயம், தடுமாற்றம் எதுவுமே தெரியவில்லை.. அசால்ட்டாக குழந்தையை கடத்தி கொண்டு போகிறார். போலீசார் தீவிரமாக இந்த விசாரணையில் இறங்கி உள்ளனர்.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications