Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஞ்ச் டயலாக்குடன் அடுத்தடுத்த கொலை.. அக்னி பிரதர்ஸுக்கு செக் வைக்கும் போலீஸ்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி வாங்க கடந்த மூன்று ஆண்டுகளில் நான்கு தலையை சிதைத்து கொலை செய்திருக்கிறது அக்னி பிரதர்ஸ் கும்பல். ஒவ்வொரு கொலை குறித்தும் சினிமா பாணியில் பஞ்ச் டயலாக்குடன் இன்ஸ்டாகிராமில் வெளிப்படையாக பதிவும் போட்டு போலீஸுக்கே சவால்விட்டு வந்த நிலையில், அக்னிபிரதர்ஸ் கும்பலுக்கு அடுத்தடுத்து செக் வைத்து வருகின்றனர் போலீஸார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு 30 வயது மதிக்கத்தக்க இளைஞரை ஒரு கும்பல் ஓட.. ஓட விரட்டி சென்று, தலையை சிதைத்து கொடூரமாக கொலை செய்தது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் கண்ணன் என்பவர்தான் கொலை செய்யப்பட்டிருந்தார். இதன் பின்னணியை விசாரிக்கும்போது கிடைத்த தகவல்களால் காவல்துறையே அதிர்ந்தி கிடக்கிறது. சிவகங்கை மாவட்டம், ஆலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அக்னிராஜ். சட்டக்கல்லூரி மாணவரான இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு மைனர் மணி என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்த சில நாட்களிலேயே அக்னிராஜை, மைனர் மணி நண்பர்கள் வெட்டி கொன்றனர். இதில் ஆத்திரமடைந்த அவரின் நண்பர்கள், அக்னிராஜ் கொலைக்கு, 'பழிக்கு பழி வாங்கியே தீருவோம்' என சபதம் எடுத்தனர். இதற்காக 'அக்னி பிரதர்ஸ்' என்ற பெயரில் வாட்ஸ் அப் குழுவை தொடங்கி தகவல்களை பரிமாறியுள்ளனர்.

Crime Agniraj

அதனுடன் இன்ஸ்டாகிராமில் Agni Brothers, Agni Devan Bloods, Agni Spatans என்ற பெயர்களில் ஆக்டிவாக இயங்கி வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் அக்னிராஜ் கொலையில் சம்மந்தப்பட்ட பரமசிவம், ஆகாஷ், அழகு பாண்டி ஆகியோரை அடுத்தடுத்து சரமாரியாக வெட்டி, தலையை சிதைத்து ஒரே பாணியில் கொலை செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாகதான் வினோத் கண்ணனை, சினிமா பாணியில் காரில் சேஸ் செய்து விரட்டி சென்று தலையை வெட்டி சிதைத்து கதற கதற கொலை செய்துள்ளனர். நண்பன் கொலைக்கு நான்கு பேரை கொன்று பழிவாங்கியும் அக்னி பிரதர்ஸ் ஆத்திரம் அடங்கவில்லை.

அக்னிராஜ் கொலை வழக்கில் கைதான பூச்சி இருளப்பன், விக்கி, சக்திவேல், தர்மராஜ் ஆகியோருக்கும் இந்த கும்பல் ஸ்கெட்ச் போட்டுள்ளது. ஜாமீனில் வெளிவந்துள்ள அந்த நான்கு பேரும் தலைமறைவாக உள்ளனர். "அவர்களின் கதைகளை முடிக்கும் வரை ஓயமாட்டோம்." என சமூகவலைதளங்களில் வெளிப்படையாக பதிவு செய்கின்றனர். ஒவ்வொரு கொலை முடிந்ததும், அது குறித்தான தகவல்கள், அடுத்து செய்ய உள்ள சம்பவங்கள் குறித்த அப்டேட்களையும் அக்னி பிரதர்ஸ் கும்பல் இன்ஸ்டாகிராமில் பகிரங்கமாக பதிவு செய்கிறார்கள்.

"பகைக்கு வயது 3. கதைக்கு முடிவு சொல்லலாம், பகைக்கு.? அக்னியின் வேட்டை அட்டகாசமாக தொடர உள்ளது. சிந்திய ரத்தம் வீண் போகாது. விரைவில் தலைகள் சிதறும்." என்று பதிவு செய்துள்ளனர். கடைசியாக நடந்த வினோத் கண்ணன் கொலைக்கு பிறகும் கூட, "பதில் தரமாக இருந்ததா. மீண்டும் தொடரும்." என்று கண்ணன் கொலை செய்யப்பட்ட புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாகவும் வைத்துள்ளனர். ஏற்கனவே மூன்று கொலைகள் முடிந்தும், வினோத் கண்ணன் கொலைக்கு பிறகுதான் அக்னி பிரதர்ஸ் குறித்த தகவல் வெளியில் வரத்தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பல்லடம் போலீஸார் 3 தனிப்படை அமைத்து கொலை குற்றவாளிகளை தேடி வந்தனர். அதன் தொடர்ச்சியாக நிதிஷ்குமார், காளீஸ்வரன், பிரபுதேவா, சாமிநாதன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. அக்னி பிரதர்ஸ் குழுவின் வெறியாட்டத்துக்கு பயந்து வினோத்தும் தலைமறைவாகவே இருந்துள்ளார். இதனிடையே இவர்களில் பிரவுதேவா, சாமிநாதன் ஆகியோர் வினோத்துடன் நட்பாக பழகி நம்ப வைத்துள்ளனர். அவர்களை பார்ப்பதற்காக வினோத் ஆந்திராவில் இருந்து வரும்போது, அக்னி பிரதர்ஸ்க்கு தகவல் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. அப்படி திட்டமிட்டுதான் வினோத் கண்ணனை கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸ் தேடி வந்த நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை ஆவாரங்காட்டைச் சேர்ந்த அஜய்தேவன், திருச்செந்தூரைச் சேர்ந்த சுரேஷ் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்த அக்னிராஜின் தந்தை தங்கமணியையும் காவல துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+