8 வயது குழந்தையை.. 65 வயது தாத்தாவின் அட்டகாசம்.. 7 வருடம் ஜெயில்!
8 வயது குழந்தையை சீரழித்த முதியவருக்கு 7 வருஷ தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
Recommended Video
திருப்பூர்: 8 வயசு பெண் குழந்தையை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று நாசம் செய்த 65 வயசு தாத்தாவுக்கு 7 வருஷ ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது.
திருப்பூர் ஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர் அனீபா. வயசு 65. சென்ற வருடம் வீட்டு பக்கத்தில் 8 வயசு பெண் குழந்தை விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது தன் வீட்டு மாடிக்கு சிறுமியை அழைத்து சென்ற அனீபா, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதை அந்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் பார்த்துவிட்டு, நடந்த சம்பவம் குறித்து அந்தச் சிறுமியின் பாட்டியிடம் சென்று சொல்லியிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து அச்சிறுமியை அழைத்து பாட்டி விசாரித்தபோதுதான், தாத்தா விஷயம் வெளியே தெரிந்தது. இது சம்பந்தமாக அனைத்து மகளிர் போலீசில் பெற்றோர் புகார் தந்தனர். இதையடுத்து முதியவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
இது சம்பந்தமான விசாரணை திருப்பூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இதில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அனீபாவிற்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் 7 வருட சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications