இனாம் நிலங்களுக்கு பூஜ்ஜியம் மதிப்பு.. திருப்பூரில் ஒரே கிராமத்தில் 650 ஏக்கர் நிலம் பாதிப்பு
திருப்பூர்: தமிழக அரசு, நீண்டகாலமாக நிலவி வந்த இனாம் நிலங்கள் தொடர்பான சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், அரசு புதிய அரசாணையை சில காலம் முன்பு வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட இனாம் நிலங்களுக்கு அரசு வழிகாட்டி மதிப்பை பூஜ்ஜியம்' (Zero) என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பல ஆயிரம் விவசாயிகள் போராடி வருகிறார்கள். இனாம் நிலத்தினை பூஜ்ஜியம் மதிப்பு செய்வதால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இனாம் நிலம் என்பது, சுதந்திரத்திற்கு முன், நிலத்தின் மொத்த அல்லது ஒரு பகுதியை, அரசர்கள் அல்லது ஜமீன்தார்கள் சிலருக்கு (பொதுவாக மத நிறுவனங்கள், அறக்கட்டளைகள் அல்லது கல்விப் பணிகள் செய்தவர்களுக்கு) வரி விலக்கு அளிக்கப்பட்ட மானியமாகவோ (Grant) அல்லது பரிசாகவோ அளித்த நிலங்களாளும் இந்த நிலங்கள் அரசின் நில அளவை ஆவணங்களில் "இனாம்" என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.

அரசு வெளியிட்ட புதிய உத்தரவு என்ன
புதிய அரசு உத்தரவு, 'இனாம் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி உரிமைகள் வழங்கும் சட்டம், 1963'-இன் கீழ், அரசுக்குச் சொந்தமான நிலங்கள் என அறிவிக்கப்பட்ட இனாம் நிலங்களின் வழிகாட்டி மதிப்பை ரத்து செய்து, அதனை 'பூஜ்ஜியம்' ஆக்கி உள்ளது. இந்த உத்தரவு, அரசாங்கத்தின் வசமுள்ள அரசால் கையகப்படுத்தப்பட்ட இனாம் நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலங்கள், கிராம நத்தம், புறம்போக்கு, மயானம் அல்லது நீர்நிலைகள் போன்ற அரசுப் பயன்பாட்டிற்காக வகைப்படுத்தப்பட்டு, இதுவரை தனியார் ஆக்கிரமிப்பில் அல்லது சட்டவிரோதமாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட நிலங்களாக இருந்து வருகின்றன.
இனாம் ஒழிப்புச் சட்டம்
இனாம் ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வந்தபோது, பல இனாம் நிலங்கள் அரசுக்குச் சொந்தமாயின. ஆனால், அவை தொடர்ந்து தனியார் பெயர்களில் பத்திரப் பதிவு செய்யப்பட்டு, கைமாறிக் கொண்டிருந்தன. இதனால் அரசுக்கு இரண்டு முக்கியப் பிரச்சனைகள் எழுந்தது. சட்டப்படி அரசின் நிலங்கள் பத்திரப் பதிவு செய்யப்படும்போது, அரசு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் அதிக வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தன. அரசு நிலங்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதால், நீதிமன்றங்களில் வழக்குகளும், நில ஆக்கிரமிப்புப் பிரச்சனைகளும் அதிகரித்து வந்தது.
யாரும் வாங்க மாட்டார்கள்
எனவே வழிகாட்டி மதிப்பை 'பூஜ்ஜியம்' என்று நிர்ணயிப்பதன் மூலம், இந்த நிலங்களைச் சட்டவிரோதமாகப் பத்திரப் பதிவு செய்யும் நடைமுறை முற்றிலும் தடுக்கப்பட்டது. ஏனெனில், வழிகாட்டி மதிப்பு பூஜ்ஜியம் என்றால், பத்திரப் பதிவுக்கான கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்க முடியாது. அத்துடன் இது போன்ற நிலங்களை யாரும் வாங்க முன்வர மாட்டார்கள் என்பதால் இந்த உத்தரவை அரசு பிறப்பித்தது.
இந்த உத்தரவு யாருக்குப் பொருந்தாது?
சட்டப்படி 'ரயத்துவாரி பட்டா' பெற்று, முறையான உரிமைகளுடன் உள்ள தனியார் இனாம் நிலங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று அரசு அறிவித்திருந்தது. இந்த உத்தரவு, சட்டப்படி அரசு நிலமாக வகைப்படுத்தப்பட்ட இடங்களில் மட்டும் சட்டவிரோதமான பத்திரப் பதிவைத் தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மொத்தமாக பார்த்தால். அரசுக்குச் சொந்தமான இனாம் நிலங்களைச் சட்டவிரோதமாக விற்பது மற்றும் பத்திரப் பதிவு செய்வதைத் தடுக்கவே அரசுபுதிய அரசாணை வெளியிட்டது. இந்த உத்தரவு விவசாயிகளை பாதித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தள்ளது.
பூஜ்ஜியம் மதிப்பு
இது தொடர்பாக விவசாய அமைப்பினர் கூறுகையில், இந்தியா முழுவதும் நான்கு கோடி ஏக்கருக்கு மேற்பட்ட இனாம் நிலங்கள் உள்ள நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் உழுது கொண்டிருந்த விவசாயிகளுக்கும் குடியிருந்த மக்களுக்கும் நில உரிமை வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 13 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இவற்றில் உழுது கொண்டிருந்த விவசாயிகளுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் நில உரிமை பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வக்பு வாரியம் தங்களுடைய நிலம் என்று சொல்லி பத்திரப்பதிவு துறைக்கு பூஜ்ஜியம் மதிப்பு செய்ய அறிவுறுத்தி கடிதம் வழங்கியுள்ளது.
பல்லடத்தில் மட்டும் 650 ஏக்கர் நிலம்
இதனால் பட்டாக்களை ரத்து செய்வதும் நிலத்தை ஏலம் விடுவது போன்ற பணிகள் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனால் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூர் கிராமத்திற்கு உட்பட்ட 650 ஏக்கருக்கு மேற்பட்ட இனாம் நிலங்கள் பயன்படுத்தி வரும் விவசாய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்து சமய அறநிலையத்துறை வழங்கி உள்ள பூஜ்ஜியம் மதிப்பு செய்யும் அறிவுறுத்தல் கடிதத்தை திரும்ப பெறக் கோரியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று அந்த அமைப்பு கூறியது.
திருப்பூரில் போராட்டம்
இதனிடையே தாங்கள் பயன்படுத்தும் நிலத்தை வழங்க வேண்டும் என கூறி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் இனாம் நில விவசாயிகள் குத்தகையாளர்கள் சங்கம் இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து தங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications